தேசிய செய்திகள்

பட்டப்பகலில் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபர் கைது + "||" + Young woman set on fire by teen stalker in broad daylight in Kerala

பட்டப்பகலில் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபர் கைது

பட்டப்பகலில் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபர் கைது
கேரளாவில் பட்டப்பகலில் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபரை போலீஸ் கைது செய்தது.

 
பத்தனம்திட்டா மாவட்டத்தில் கல்லூரிக்கு சென்ற மாணவி கவிதா மீது அஜின் ரேஜி மேத்யூ(18) தீ வைத்துள்ளான். மேத்யூ திருவல்லா பகுதியை சேர்ந்த கவிதாவை காதலித்து வந்ததாக தெரிகிறது. மேலும் அவர் பலமுறை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கவிதாவை வலியுறுத்தியுள்ளார். இதனை அவர் மறுத்து வந்துள்ளார். திருமணத்திற்கு  பெண்ணின் பெற்றோர்களும் மறுப்பு தெரிவித்துள்ளனர். 

இன்று கல்லூரிக்கு சென்ற மாணவியிடம் மேத்யூ வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தன்னை திருமணம் செய்துகொள்ள சொல்லி மறுபடியும் வலியுறுத்தியிருக்கிறார். அதற்கு மறுக்கவும், இரண்டு பாட்டில்களில் கொண்டுவந்த பெட்ரோலை மாணவி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். உடனே சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்தவர்கள் தீயை அணைத்து பெண்ணை மீட்டு திருவல்லா அரசு மருத்தவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே தப்பி ஓட முயன்ற மேத்யூவையும் கைது செய்தனர்.  

இதனையடுத்து காவல்துறையினர் அஜின் மேத்யூ மீது 302-பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேத்யூவிடம் விசாரிக்கையில், காதலித்ததாக கூறியுள்ளார் என தகவல் தெரிவிக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் 60 சதவித தீ காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


தொடர்புடைய செய்திகள்

1. நாகர்கோவிலில் துணிகரம் தோழிக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகை பறிப்பு இளம்பெண் கைது
நாகர்கோவிலில் தோழிக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகையை பறித்து சென்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
2. கேரளாவில் வெள்ளம் : தமிழக மக்கள் உதவ வேண்டும் -தமிழில் கேரள முதல்வர் கோரிக்கை
வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு தமிழக மக்கள் உதவ வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் கோரிக்கை விடுத்துள்ளார்.
3. மழை வெள்ளத்தால் பாதிப்பு: கேரளாவுக்கு மத்திய அரசு தாராளமாக உதவும் - உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மத்திய அரசு தாராளமாக உதவும் என உள்துறை மந்திரி அமித்ஷா உறுதியளித்துள்ளார்.
4. 80 இடங்களில் நிலச்சரிவு: கேரளாவில் கனமழைக்கு 57 பேர் பலி - மீட்பு பணி தீவிரம்
கேரளாவில் கனமழை தொடர்ந்து நீடித்து வருவதால் 80 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை கனமழைக்கு 57 பேர் பலியாகி உள்ளனர். மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
5. மலப்புரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் மாயமானதாக தகவல்
கேரள மாநிலம் மலப்புரத்தில் நேரிட்ட நிலச்சரிவில் பலர் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.