உலக செய்திகள்

இந்தியாவிற்கு எதிராக மீண்டும் களமிறங்க துடிக்கும் சீனா.... அமெரிக்கா எச்சரிக்கை செய்தி + "||" + China Hints At Blocking Move On Masood Azhar Again Ahead Of UN Meeting

இந்தியாவிற்கு எதிராக மீண்டும் களமிறங்க துடிக்கும் சீனா.... அமெரிக்கா எச்சரிக்கை செய்தி

இந்தியாவிற்கு எதிராக மீண்டும் களமிறங்க துடிக்கும் சீனா.... அமெரிக்கா எச்சரிக்கை செய்தி
மசூத் அசார் விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிராக சீனா களமிறங்க வாய்ப்பு உள்ளது என மறைமுகமாக தெரியவந்துள்ளது.
வாஷிங்டன்,

பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா ஐ.நா.வில் மேற்கொண்ட முயற்சியை சீனா பலமுறை தடுத்துவிட்டது. வீட்டோ அதிகாரம் கொண்டு சீனா தடுக்கிறது. புல்வாமா தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் பயங்கரவாத இயக்க பெயரை குறிப்பிடுவதில் சீனா தவறிவிட்டது. இப்போது மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சியை பிரான்ஸ் முன்னெடுக்கிறது. வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா மறுத்தால் கண்டிப்பாக இது தடையை ஏற்படுத்தும்.

"சீனா தொடர்ந்து பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளும், ஐநா பாதுகாப்பு கவுன்சில் 1267 குழுவின் ஆய்வில் பங்கு கொள்ளும்,” என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தீர்வு எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என சீனா கூறியுள்ளது. இதுபோன்று கூறிதான் மூன்று முறை தடையை ஏற்படுத்தியது. இப்போதும் அதனையே கூறுகிறது. எனவே தடையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்றே பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே  சீனாவை மறைமுகமாக எச்சரிக்கும் செய்தியையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. “மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதில் ஏற்படும் தோல்வி பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு,” எதிரானதாக அமையும் என அமெரிக்கா எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதிமுறைகள் அனைத்தும் மசூத் அசாருக்கு பொருந்தும் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கையில் மனித வெடிகுண்டாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்
இலங்கையில் தொழில் அதிபரின் மகன்கள் 2 பேர், மனித வெடிகுண்டுகளாக செயல்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
2. கோவை ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை
கோவையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் விசாரணையை மேற்கொண்ட போது கிடைத்த தகவலை கொண்டே இலங்கைக்கு இந்தியா பயங்கரவாத தாக்குதல் தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது. #SriLanka #SriLankaBlasts #NIA #India
3. அருணாசல பிரதேசத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
4. ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது - அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்
ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது என்ற அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
5. உலகைச் சுற்றி...
சீனாவில் அடுத்த ஆண்டுக்குள் வறுமையை ஒழிப்பதற்கு அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் சூளுரைத்துள்ளார்.