தேசிய செய்திகள்

கர்நாடகாவில் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளிடையே கூட்டணி தொகுதி ஒதுக்கீட்டில் முடிவு எட்டியது + "||" + Cong to contest 20 seats and JDS 8 in LS polls

கர்நாடகாவில் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளிடையே கூட்டணி தொகுதி ஒதுக்கீட்டில் முடிவு எட்டியது

கர்நாடகாவில் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளிடையே கூட்டணி தொகுதி ஒதுக்கீட்டில் முடிவு எட்டியது
கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே கூட்டணி தொகுதி ஒதுக்கீட்டில் முடிவு எட்டப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே கூட்டணி ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றிய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் முடிவில் காங்கிரஸ் கட்சி 20 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 8 இடங்களிலும் போட்டியிட முடிவாகியுள்ளது.  இதற்கு முன் எச்.டி. தேவ கவுடா கூறும்பொழுது, அவரது பேரன்களான நிகில் குமாரசாமி மற்றும் பிரஜ்வால் ரேவண்ணா ஆகியோர் முறையே மாண்டியா மற்றும் ஹாசன் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர் என கூறினார்.  ரேவண்ணா தேவ கவுடாவின் சகோதரர் மகன் ஆவார்.

இந்த தொகுதி ஒதுக்கீடானது கேரளாவின் கொச்சி நகரில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மதசார்பற்ற ஜனதா தள பொது செயலாளர் டேனிஷ் அலி ஆகியோர் இடையே நடந்த கூட்டத்தில் முடிவாகி உள்ளது.