உலக செய்திகள்

பிரேசிலில் ஆரம்ப பள்ளியில் துப்பாக்கிச் சூடு -6 மாணவர்கள் உள்பட 10 பேர் பலி + "||" + In Brazil the primary school was shot dead - 10 people, including 6 students

பிரேசிலில் ஆரம்ப பள்ளியில் துப்பாக்கிச் சூடு -6 மாணவர்கள் உள்பட 10 பேர் பலி

பிரேசிலில் ஆரம்ப பள்ளியில் துப்பாக்கிச் சூடு -6 மாணவர்கள் உள்பட 10 பேர் பலி
பிரேசிலில் ஆரம்ப பள்ளி ஒன்றில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 மாணவர்கள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சாவ் பாலோ,

பிரேசில் நாட்டு தலைநகரான சாவ் பாலோ நகருக்குள் உள்ள சுஸானோ பகுதியில் பேராசிரியர் ரவுல் பிரேசில் ஆரம்ப பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

இன்று காலை இந்தப் பள்ளியில் வகுப்புகள் தொடங்கிய நிலையில் கைகளில் துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்த இருவர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 மாணவர்கள் உள்பட 10 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.


இந்த சம்பவத்தில் 6 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சாவ் பாலோ மாநில கவர்னர் ஜோவோ டோரியா உறுதிப்படுத்தி உள்ளார்.