தேசிய செய்திகள்

மத்திய மந்திரிசபை ஒப்புதலை அடுத்து நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு, ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது + "||" + The parliamentary election announcement was sent to the president following the approval of the Union Cabinet

மத்திய மந்திரிசபை ஒப்புதலை அடுத்து நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு, ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது

மத்திய மந்திரிசபை ஒப்புதலை அடுத்து நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு, ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது
மத்திய மந்திரிசபை ஒப்புதலை அடுத்து நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு, ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது.
புதுடெல்லி,

17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கு 7 கட்ட தேர்தல் அறிவிப்பை தேர்தல் கமிஷன் கடந்த 10-ந் தேதி வெளியிட்டது. இதன்படி அடுத்த மாதம் 11-ந் தேதி தொடங்கி மே மாதம் 19-ந் தேதி வரை நாடு முழுவதும் 543 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.


மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 14-ன் கீழ், முறைப்படி தேர்தல் அறிவிப்பை மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் அனுப்பியது. அந்த அறிவிப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று கூடிய மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து, தேர்தல் அறிவிக்கை வெளியிடுவதற்காக ஜனாதிபதிக்கு அனுப்பியது.

இதையடுத்து தேர்தல் அறிவிக்கையை ஜனாதிபதி முறைப்படி வெளியிடுவார். அப்போது 17-வது நாடாளுமன்ற தேர்தல் நடைமுறைகள் தொடங்கி விடும்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு தொழிற்கல்வி ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பலன்கள்; மத்திய அரசு ஒப்புதல்
அரசு தொழிற்கல்வி ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பலன்களை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
2. கிராம நிர்வாக அலுவலர்களின் ஒப்புதல் பெறாமல் பட்டா வழங்க கூடாது - குறைதீர்வு கூட்டத்தில் கோட்டாட்சியரிடம் வலியுறுத்தல்
ஆரணி கோட்ட அளவில் நடந்த கிராம நிர்வாக அலுவலர் குறைதீர்வு நாள் கூட்டத்தில், தங்கள் ஒப்புதலுடனேயே பட்டா வழங்க வேண்டும் என கோட்டாட்சியரிடம் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.