தேசிய செய்திகள்

6 மாதத்தில் ஓய்வு பெறுபவரையும் டி.ஜி.பி.யாக நியமிக்க பரிசீலிக்கலாம் - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு + "||" + We may consider the appointment of retired DGP borrower in 6 months - Supreme Court action orders

6 மாதத்தில் ஓய்வு பெறுபவரையும் டி.ஜி.பி.யாக நியமிக்க பரிசீலிக்கலாம் - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

6 மாதத்தில் ஓய்வு பெறுபவரையும் டி.ஜி.பி.யாக நியமிக்க பரிசீலிக்கலாம் - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
6 மாதத்தில் ஓய்வு பெறுபவரையும் டி.ஜி.பி.யாக நியமிக்க பரிசீலிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி,

மாநிலங்களில் போலீஸ் டி.ஜி.பி. நியமனம் உள்ளிட்ட போலீஸ் சீர்திருத்தம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3-ந் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், ஓய்வு பெறுவதற்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கிற ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக நியமிக்க பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய பணியாளர் தேர்வாணையம் யு.பி.எஸ்.சி.க்கு உத்தரவிட்டது.


இந்த உத்தரவை எதிர்த்து உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் டி.ஜி.பி. பிரகாஷ் சிங் ஒரு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து கடந்த மாதம் 18-ந் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்தது. அதில், ‘6 மாதத்தில் ஓய்வு பெற இருக்கிற ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் டி.ஜி.பி.யாக நியமிக்க யு.பி.எஸ்.சி. பரிசீலிக்கலாம் என்றும், டி.ஜி.பி. நியமனத்தை பொறுத்தமட்டில் தகுதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு பரிந்துரை பட்டியலை யு.பி.எஸ்.சி. தயாரிக்க வேண்டும்’ என்றும் கூறப்பட்டுள்ளது.