தேசிய செய்திகள்

அமைதியை விரும்புகிறீர்கள் என்றால் மசூத் அசாரை ஒப்படையுங்கள்: இம்ரான் கானுக்கு சுஷ்மா சுவராஜ் சவால் + "||" + Sushma Swaraj challenges Pakistan PM Imran Khan, says ‘prove statesmanship, handover Masood Azhar’

அமைதியை விரும்புகிறீர்கள் என்றால் மசூத் அசாரை ஒப்படையுங்கள்: இம்ரான் கானுக்கு சுஷ்மா சுவராஜ் சவால்

அமைதியை விரும்புகிறீர்கள் என்றால் மசூத் அசாரை ஒப்படையுங்கள்: இம்ரான் கானுக்கு சுஷ்மா சுவராஜ் சவால்
அமைதியை விரும்புகிறீர்கள் என்றால் மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படையுங்கள் என்று இம்ரான் கானுக்கு சுஷ்மா சுவராஜ் சவால் விடுத்துள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுஷ்மா சுவராஜ் கூறியதாவது: பாகிஸ்தானை பயங்கரவாத அமைப்புகள் இல்லாத நாடாக மாற்றினால் அந்நாட்டுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தவும், சுமூகமான சூழலை உருவாக்கிக் கொள்ளவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

 பயங்கரவாதத்தை ஒழிப்பதிலும் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம். ஆனால், பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை சாத்தியம். 

இம்ரான்கான் பெருந்தன்மையானவர், அமைதியை விரும்புகிறவர் என்று சிலர் சொல்கிறார்கள். உண்மையிலேயே அவர் அமைதியை விரும்புகிறவராக இருந்தால் மசூத் அசாரை இந்தியாவிடம் இம்ரான் கான் ஒப்படைக்கட்டும். அவர் எவ்வளவு பெருந்தன்மையானவர் என்பது இதில் தெரிந்து விடும்”  என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. குல்பூஷண் ஜாதவ் விவகாரம்: பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கையை தொடரும் - இம்ரான் கான்
குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கையை தொடரும் என இம்ரான் கான் கூறியுள்ளார்.
2. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்?
பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அசார் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
3. சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசாரை அறிவித்தது சாதனை : ஐ.நா. சபையில் உறுப்புநாடுகள் பெருமிதம்
இந்தியாவில் கடந்த பிப்ரவரி 14–ந் தேதி துணை ராணுவ வீரர்களை குறிவைத்து புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியது, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு ஆகும்.
4. பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு
பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டான்.
5. சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் மசூத் அசார் பெயர் விவகாரம் சரியாக தீர்க்கப்பட வேண்டும் -சீனா
சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் மசூத் அசார் பெயர் விவகாரம் சரியாக தீர்க்கப்பட வேண்டும் என சீனா கூறி உள்ளது.