மாநில செய்திகள்

விஜயகாந்தை சந்திக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ் + "||" + Meets Vijayakanth pmk Founder Ramadoss

விஜயகாந்தை சந்திக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்

விஜயகாந்தை சந்திக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காலை சந்தித்து பேசுகிறார்.
சென்னை,

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு 5, பா.ம.க.வுக்கு 7, தே.மு.தி.க.வுக்கு 4, என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவைகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்தை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காலை சந்தித்து பேசுகிறார். ராமதாஸ் உடன் அன்புமணியும் விஜயகாந்த்தை சந்திக்க உள்ளார். 

தேர்தல் களப்பணி குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமக இடம்பெற்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.