தேசிய செய்திகள்

சீன அதிபரை கண்டு மோடி அச்சப்படுகிறார் : ராகுல் காந்தி கடும் தாக்கு + "||" + China shields Masood Azhar: Rahul Gandhi calls PM weak, says Modi scared of Xi

சீன அதிபரை கண்டு மோடி அச்சப்படுகிறார் : ராகுல் காந்தி கடும் தாக்கு

சீன அதிபரை கண்டு மோடி அச்சப்படுகிறார் : ராகுல் காந்தி கடும் தாக்கு
பலவீனமான மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கண்டு அச்சப்படுவதாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சியாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்துள்ளது.  சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கண்டு மோடி அச்சப்படுவதாக ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “ பலவீனமான மோடி ஜி ஜின்பிங்கை பார்த்து பயப்படுகிறார். இந்தியாவிற்கு எதிரான சீனாவின் நடவடிக்கை பற்றி ஒரு வார்த்தை கூட அவரது வாயில் இருந்து வரவில்லை.
மோடியின் சீன தூதரக கொள்கையாதெனில்,  குஜராத்தில் ஜி ஜின்பிங்குடன் உலாவுவது, டெல்லியில் ஜின்பிங்கை கட்டி  அணைப்பது, சீனாவில் ஜின்பிங்கை  தலைகுனிந்து வணங்குவது ஆகியவைதான் ஆகும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. கலபுரகியில் காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் : மோடி மீது ராகுல் காந்தி கடும் தாக்கு
கலபுரகியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது “திருடி பிடிபட்டதும் எல்லோரையும் காவலாளி ஆக்கிவிட்டார்” என்று பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசினார்.
2. ராகுல் காந்தி, பிரியங்காவுக்கும் நில பேர ஊழலில் தொடர்பு - மத்திய மந்திரி அதிரடி குற்றச்சாட்டு
ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கும் நில பேர ஊழலில் தொடர்பு இருப்பதாக மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி குற்றம் சாட்டினார்.
3. மு.க. ஸ்டாலின் விரைவில் தமிழக முதல்வர் ஆவார் - ராகுல் காந்தி பேச்சு
மு.க. ஸ்டாலின் விரைவில் தமிழக முதல்வர் ஆவார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
4. காங்கிரசில் இணைந்த ஹர்திக் பட்டேல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்?
காங்கிரசில் இணைந்த ஹர்திக் பட்டேல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் என தெரிகிறது.
5. மோடி அரசு வாக்குறுதியை காப்பாற்றவில்லை - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
மோடி அரசு கொடுத்த வாக்குறுதியை மோடி அரசு காப்பாற்றவில்லை என்று காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா குற்றம் சாட்டினார்.