மாநில செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு + "||" + pollachi sexual abuse case transferred to CBI

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு
பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை,

பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களை ஏமாற்றி காதல் வலையில் வீழ்த்தி, சீரழித்த வழக்கில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு (வயது 27), அவருடைய நண்பர்கள் என்ஜினீயர் சபரிராஜன் (27), சதீஷ் (27) மற்றும் வசந்தகுமார் (27) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையில், போலீசார் இந்த வழக்கில் விசாரணை நடத்திய போலீசாரிடம் வழக்கு குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுமாறு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் வலியுறுத்தி வந்த நிலையில், சி.பி.ஐ.க்கு வழக்கு விசாரணையை மாற்ற நேற்று முன்தினம் முடிவு செய்தது.

இந்த நிலையில், வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சி.பி.சி.ஐ.டி. வழக்கை  விசாரித்து வரும் நிலையில், தமிழக உள்துறை அமைச்சகம் சி.பி.ஐ.க்கு வழக்கை மாற்றி அரசாணை வெளியிட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பொள்ளாச்சி விவகாரம்: முறையான விசாரணை நடத்தக்கோரி பொள்ளாச்சியில் இன்று கடையடைப்பு
பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை கடுமையான பிரிவுகளில் தண்டிக்க கோரியும், முறையான விசாரணை நடத்த கோரியும் பொள்ளாச்சி வியாபாரிகள் சங்கம் சார்பாக இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
2. பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை பாரபட்சமின்றி கைது செய்யக்கோரி - வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி பாலியல் சம்பவ குற்றவாளிகளை பாரபட்சமின்றி கைது செய்யக்கோரி திருப்பூரில் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு செய்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. போலீஸ் காவல் முடிந்து திருநாவுக்கரசு மீண்டும் சிறையில் அடைப்பு - கூட்டாளிகள் 3 பேரை விசாரிக்க முடிவு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திருநாவுக்கரசின் போலீஸ் காவல் முடிந்து நேற்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதைதொடர்ந்து திருநாவுக்கரசின் கூட்டாளிகள் 3 பேரை விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
4. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து வக்கீல்கள்-பெண்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து வக்கீல்கள், பெண்கள் தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பெரம்பலூரில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பெரம்பலூரில் நேற்று 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.