தேசிய செய்திகள்

கர்தார்பூர் காரிடார் விவகாரம் தொடர்பாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தொடக்கம் + "||" + Pakistani delegation at the Wagah Border. Pakistani and Indian delegations will hold discussions over KartarpurCorridor

கர்தார்பூர் காரிடார் விவகாரம் தொடர்பாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தொடக்கம்

கர்தார்பூர் காரிடார் விவகாரம் தொடர்பாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தொடக்கம்
கர்தார்பூர் காரிடார் விவகாரம் தொடர்பாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது.
அமிர்தசரஸ்,

பாகிஸ்தானின் கர்தார்பூரில், சீக்கிய மத குருவான குருநானக் தேவ் சில ஆண்டுகள் வசித்தார். இதையொட்டி இந்தியாவில் வசிக்கும் சீக்கியர்கள் அங்கு புனித பயணம் மேற்கொள்வது வழக்கம். இவர்கள் எளிதில் சென்றுவரும் வகையில் கர்தார்பூர் வழித்தடம் அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இந்த வழித்தடம் இந்தாண்டு இறுதிக்குள் நிறைவு பெறும் என்றும், இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிஸாரியா கூறியிருந்தார்.

இந்நிலையில் கர்தார்பூர் காரிடார் விவகாரம் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. அட்டாரி-வாகா எல்லையில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் இருநாடு அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.