மாநில செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: தாமாக முன்வந்து விசாரிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு + "||" + Pollachi Sexual Harassment:  Dismissal of Chennai High Court

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: தாமாக முன்வந்து விசாரிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: தாமாக முன்வந்து விசாரிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை ஐகோர்ட் நிராகரித்தது.
சென்னை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கி உள்ளது.  

இந்நிலையில், இன்று  சென்னை ஐகோர்ட்டில்  பெண் வழக்கறிஞர்கள் சிலர், தலைமை நீதிபதி தஹில் ரமானி, நீதிபதி துரைசாமி அமர்வின் முன்பு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும், ஐகோர்ட் நீதிபதி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும், தமிழக அரசுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என முறையிட்டனர்.

இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறி கோரிக்கையை நிராகரித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய பாலியல் பலாத்கார வீடியோக்கள் 90 சதவீதம் அழிப்பு: சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல்
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய 90 சதவீத வீடியோக்கள் அழிக்கப்பட்டு விட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.
2. பொள்ளாச்சி சம்பவம்: குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கி தருவோம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி
பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கி தருவோம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.
3. பொள்ளாச்சி சம்பவத்தைப்போல் செல்போனில் ஆபாச படம் எடுத்து இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர்
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை தொடர்ந்து நாகை மாவட்டத்திலும் இளம்பெண்ணை மயக்கி ஆபாச படமெடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
4. பொள்ளாச்சி சம்பவம்: திருநாவுக்கரசை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய திருநாவுக்கரசை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது.
5. பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி 2 பள்ளி மாணவிகள் மனு
பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி கோட்டாட்சியரிடம் 2 பள்ளி மாணவிகள் மனு அளித்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை