மாநில செய்திகள்

பொள்ளாச்சி சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை தமிழக அரசின் நடவடிக்கை சந்தேகத்தை எழுப்பியுள்ளது- திருமாவளவன் + "||" + Pollachi incident: CBI probe recommendation Action of the Tamil Nadu Government Raised suspicions- Thirumavalvan

பொள்ளாச்சி சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை தமிழக அரசின் நடவடிக்கை சந்தேகத்தை எழுப்பியுள்ளது- திருமாவளவன்

பொள்ளாச்சி சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை தமிழக அரசின் நடவடிக்கை சந்தேகத்தை எழுப்பியுள்ளது-  திருமாவளவன்
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்துள்ளது. தமிழக அரசின் இந்நடவடிக்கை சந்தேகத்தை எழுப்பியுள்ளது என திருமாவளவன் கூறினார்.
தூத்துக்குடி 

தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். பொள்ளாச்சியில் நடைபெற்ற அவலம் தமிழகத்துக்கே தலைக்குனிவு.

இச்சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை நடத்தப்படும் என அறிவித்த தமிழக அரசு, சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்துள்ளது. தமிழக அரசின் இந்நடவடிக்கை சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

பொள்ளாச்சி சம்பவம் குறித்து நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தியும், பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 15) ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்”

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நீட் தேர்வு பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் திருமாவளவன் பேட்டி
நீட் தேர்வு பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் திருமாவளவன் பேட்டி.
2. தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை - தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
3. கூட்டணி விவகாரம்: மு.க.ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன் - திருமாவளவன்
கூட்டணி விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன் என்று திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளார்.
4. தமிழகத்திலேயே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருமாவளவன்
தமிழகத்திலேயே சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தொல்.திருமாவளவன் வெற்றி பெற்றார்.
5. நாடக அரசியல் நடத்தி ராமதாஸ் மக்களை ஏமாற்றி வருகிறார் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
நாடக அரசியல் நடத்தி ராமதாஸ் மக்களை ஏமாற்றி வருகிறார் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு.

ஆசிரியரின் தேர்வுகள்...