தேசிய செய்திகள்

ஹேக்கிங் செய்யப்பட்டு 10 நாட்களாகியும் செயல்பாட்டிற்கு வராத பா.ஜனதா இணையதளம்! + "||" + Why BJP Has Not Yet Revived Its Website After Last Weeks Hack

ஹேக்கிங் செய்யப்பட்டு 10 நாட்களாகியும் செயல்பாட்டிற்கு வராத பா.ஜனதா இணையதளம்!

ஹேக்கிங் செய்யப்பட்டு 10 நாட்களாகியும் செயல்பாட்டிற்கு வராத பா.ஜனதா இணையதளம்!
ஹேக்கிங் செய்யப்பட்டு 10 நாட்களாகியும் பா.ஜனதா இணையதளம் செயல்பாட்டிற்கு வரவில்லை.

பா.ஜனதா கட்சியின் இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டு, பிரதமர் மோடியை கேலி செய்யும் வகையிலான மீம்ஸ் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது.

பிரதமர் மோடி, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன் கைகுலுக்க கையை நீட்டுவார். ஆனால், அதனை கண்டுகொள்ளாத மெர்கல், மோடியை இரு நாட்டின் தேசியக்கொடி வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அழைத்து செல்வார். இந்த வீடியோ பா.ஜனதாவின் இணையதளத்தில் மோசமான வாசகங்களுடன் இடம் பெற்றது.

வீடியோவுக்கு கீழே போஹேமியன் ராப்சோடி வீடியோவும் இடம் பெற்றது. இதனையடுத்து பா.ஜனதா இணையதளத்தின் சேவை கடந்த 5-ம் தேதி காலை துண்டிக்கப்பட்டது. 

“விரைவில் இணையதளம் செயல்பாட்டுக்கு வரும், இணையதளத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது,” என தெரிவிக்கப்பட்டது. இப்போது 10 நாட்கள் ஆகியும் இணையதளம் செயல்பாட்டுக்கு வரவில்லை.

இதனை விமர்சனம் செய்யும் வகையில் டுவிட்டரில் மீம்ஸ்கள் பரவுகிறது. இதுதான் மோடியின் டிஜிட்டல் இந்தியா என்றும், இணையதளத்தின் தகவல்களை முன்னாள் பிரதமர் நேரு திருடி விட்டார் எனவும் கேலி செய்யும் வகையில் மீம்ஸ் பரவுகிறது.

ஆனால் பா.ஜனதா தரப்பில், “இணையதளத்தை சில மணி நேரங்களில் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் இந்த நேரத்தை எங்களுடைய இணையதளத்தை புதுப்பிக்க கிடைத்த வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறோம்.

இணையதளத்தை புதுப்பிக்க கடந்த 3 மாதங்களாகவே திட்டமிட்டு இருந்தோம். புதிய தொழில்நுட்பம் எதுவும் 5 ஆண்டுகளாக பயன்படுத்தப்படவில்லை. இணையதளத்தை ஹேக்கிங் செய்ய முடியாத வகையில் நடவடிக்கையை மேற்கொள்கிறோம்,” என தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டசபை தேர்தலில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் கிடைக்குமா?
சட்டசபை தேர்தலில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் வழங்குவது குறித்து மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
2. சிக்கிம் மாநிலத்தில் எஸ்டிஎப் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் பா.ஜனதாவில் இணைந்தனர்
சிக்கிம் மாநில அரசியலில் திடீர் திருப்பமாக எஸ்.டி.எப். கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்.
3. மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் தந்தையுடன் பா.ஜனதாவில் இணைந்தார்
மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் தனது தந்தை மஹாவீர் போகத்துடன் பா.ஜனதாவில் இணைந்துள்ளார்.
4. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை கொறடா பா.ஜனதாவில் இணைந்தார்
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் மாநிலங்களவை கொறடா பா.ஜனதா கட்சியில் இணைந்தார்.
5. ‘பா.ஜனதா அரசால், அழிப்பதற்கு மட்டுமே முடியும்’ - ராகுல் காந்தி கடும் தாக்கு
நாட்டின் பொருளாதார மந்தநிலை தொடர்பாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய பா.ஜனதா அரசை ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.