தேசிய செய்திகள்

பா.ஜ.க.வில் இணைந்த சோனியா காந்தியின் முக்கிய உதவியாளர் + "||" + Key Sonia aide Tom Vadakkan joins BJP

பா.ஜ.க.வில் இணைந்த சோனியா காந்தியின் முக்கிய உதவியாளர்

பா.ஜ.க.வில் இணைந்த சோனியா காந்தியின் முக்கிய உதவியாளர்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் முக்கிய உதவியாளர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தியின் முக்கிய உதவியாளராக இருந்தவர் டாம் வடக்கன்.  இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இன்று தன்னை இணைத்து கொண்டார்.

இதன்பின் உடனடியாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்பொழுது, காங்கிரசில் இருக்கும்பொழுது, அதிகார மையத்தில் இருப்பவர் யாரென்று தெளிவாக தெரியாத சூழ்நிலையில் நான் அதிகம் துன்புறுத்தப்பட்டேன் என கூறியுள்ளார்.

புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதல் மற்றும் இதற்கு இந்திய தரப்பிலான பதிலடி ஆகியவற்றில் காங்கிரசின் நிலை ஆகியவை பற்றியும் அவர் தாக்கி பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர், பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு காங்கிரசின் எதிர்வினை வருத்தமளிக்கிறது என கூறியுள்ளார்.  பிரதமர் மோடியின் வளர்ச்சிக்குரிய விசயங்களில் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அவர் உறுதிப்பட கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெரம்பலூரில் அங்கன்வாடி உதவியாளர் பணிகளுக்கான நேர்காணல் 34 காலி இடங்களுக்கு 576 பெண்கள் வந்திருந்தனர்
பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி உதவியாளர் பணிகளுக்கான நேர்காணல் பெரம்பலூரில் நடந்தது. இதில் 34 காலி பணி இடங்களுக்கு 576 பெண்கள் வந்திருந்தனர்.
2. ராபர்ட் வதேராவின் உதவியாளர் அமலாக்கத்துறையிடம் ஆஜராவதை ராகுல் உறுதி செய்யவேண்டும் - ஸ்மிரிதி இரானி வலியுறுத்தல்
ராபர்ட் வதேராவின் உதவியாளர் அமலாக்கத்துறையிடம் ஆஜராவதை ராகுல் உறுதி செய்யவேண்டும் என ஸ்மிரிதி இரானி வலியுறுத்தி உள்ளார்.
3. சோனியா காந்தி, ராகுல் காந்தி ராணுவ ஒப்பந்தங்களில் தலையிட்டது கிடையாது - ஏ.கே. அந்தோணி
சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் ராணுவ ஒப்பந்தங்களில் தலையிட்டது கிடையாது என ஏ.கே. அந்தோணி கூறியுள்ளார்.
4. திமுக உடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது, பலமானது - ராகுல் காந்தி
திமுக உடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது, பலமானது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
5. டெல்லியில் சோனியா காந்தியுடன் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
டெல்லியில் சோனியா காந்தியை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.