மாநில செய்திகள்

அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் : மு.க. ஸ்டாலின் கண்டனம் + "||" + MK Stalin slams TN govt over students name exposed in Pollachi abuse case

அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் : மு.க. ஸ்டாலின் கண்டனம்

அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் : மு.க. ஸ்டாலின் கண்டனம்
பொள்ளாச்சி விவகாரத்தில் அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் இடம் பெற்ற சம்பவத்திற்கு மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி விவகாரத்தில்  அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் இடம் பெற்ற சம்பவத்திற்கு மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்கள் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை வெளியுலகிற்கு கொண்டு வந்த பெண்ணின் அடையாளத்தை போலீஸ் எஸ்.பி. வெளியிட்டது விமர்சனத்துக்கு உள்ளானது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது.   வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. அதனை பரப்ப வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்படுகிறது. 

வீடியோக்கள் பாதிக்கப்பட்டவர்கள் புகாரை தெரிவிக்க கூடாது என மிரட்டும் வகையில் வெளியிடப்படுகிறதா? என்ற சந்தேகமும் எழுகிறது.  பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் பெயரை வெளியே விடக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் இடம் பெற்று இருந்தது. இதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் கடுமையான அறிவுறுத்தலை பொள்ளாச்சி விவகாரத்தில் மீறிவிட்டது அதிமுக அரசு! இனியாரும் புகார் கொடுக்கக்கூடாது என மிரட்டுகிறதா? குற்றவாளிகளை காப்பாற்ற தொடரும் ஆளுந்தரப்பின் கபடநாடகம் என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. பால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக கூறும்போது, பால் விலை உயர்வு ஏன்? - மு.க.ஸ்டாலின்
பால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக கூறும்போது பால் விலை உயர்வு ஏன்? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
2. வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 14683 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
வேலூர் மக்களவை தேர்தல் : திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 14683 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
3. வேலூர் மக்களவை தொகுதி : கதிர் ஆனந்த் 12158 வாக்குகள் முன்னிலை
வேலூர் மக்களவை தொகுதியில் இருகட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருவதால் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
4. நொடிக்கு... நொடி... மாறும் நிலவரம் பதட்டத்தில் வேட்பாளர்கள் ; ஏ.சி.சண்முகம் 13104 வாக்குகள் முன்னிலை
வேலூர் மக்களவை தொகுதியில் இருகட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருவதால் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
5. வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை