தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியில் சித்துவுக்கு நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து + "||" + Sidhu is a star spokesperson in the Congress party

காங்கிரஸ் கட்சியில் சித்துவுக்கு நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து

காங்கிரஸ் கட்சியில் சித்துவுக்கு நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து
காங்கிரஸ் கட்சியில் சித்துவுக்கு நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது.
சண்டிகார்,

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில சுற்றுலா மற்றும் கலாசார மந்திரியுமான சித்து நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு நட்சத்திர பேச்சாளராக அறிவிக்கப்பட்டார். இந்தியா–பாகிஸ்தான் இடையே கர்தார்பூர் நெடுஞ்சாலை அமைய நடவடிக்கை எடுத்ததன் மூலம் ஊடகங்களில் மிகவும் பிரபலமானார். சமீபத்தில் நடைபெற்ற 4 மாநில சட்டமன்ற தேர்தல்களில் 17 நாட்கள் அவர் பிரசாரம் மேற்கொண்டார். இதில் அவரது தொண்டை பாதிக்கப்பட்டு டாக்டர்கள் அறிவுரையின்படி சிலகாலம் ஓய்வு எடுத்துக் கொண்டார்.


பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஆஷா குமாரி கூறும்போது, ‘‘சித்து நாடு முழுவதும் தெரிந்த ஒரு நட்சத்திர பேச்சாளர். அவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமும் ஏராளமான பார்வையாளர்களுடன் தொடர்பில் உள்ளார். அவர் இந்தியா முழுவதும் பிரசாரம் செய்வார்’’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. மத்தியில் ஆட்சி மாற்றம் வந்த பின்னர் விடுபட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும் - காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் நமச்சிவாயம் பேட்டி
மத்தியில் ஆட்சி மாற்றம் வந்த பின்னர் புதுவை தேர்தல் அறிக்கையில் விடுபட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் கூறினார்.
2. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து - ராகுல் காந்தி உறுதி
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்கப்படும் என ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.
3. காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு: சர்ச்சையில் மன்மோகன் சிங் படம்
காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு காரணமாக, மன்மோகன் சிங் படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது.
4. முழுமை பெறாத கடன் தள்ளுபடி வாக்குறுதிகளையே காங்கிரஸ் கட்சி தந்துள்ளது; பிரதமர் மோடி குற்றச்சாட்டு
முழுமை பெறாத கடன் தள்ளுபடி வாக்குறுதிகளையே காங்கிரஸ் கட்சி தந்துள்ளது என பிரதமர் மோடி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
5. சேதராப்பட்டில் காங்கிரஸ் கட்சி கொடி கம்பம் அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் சாலைமறியல்
சேதராப்பட்டில் காங்கிரஸ் கட்சி கொடி கம்பம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.