தேசிய செய்திகள்

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: ராஜீவ் சக்சேனா அப்ரூவர் ஆவதில் ஆட்சேபனை இல்லை - அமலாக்கத்துறை தகவல் + "||" + Helicopter scam case: Rajiv Saxena is not objectionable for approver - Implementation Department Information

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: ராஜீவ் சக்சேனா அப்ரூவர் ஆவதில் ஆட்சேபனை இல்லை - அமலாக்கத்துறை தகவல்

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: ராஜீவ் சக்சேனா அப்ரூவர் ஆவதில் ஆட்சேபனை இல்லை - அமலாக்கத்துறை தகவல்
ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் ராஜீவ் சக்சேனா அப்ரூவர் ஆவதில் ஆட்சேபனை இல்லை என கோர்ட்டில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

மிக முக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர்கள் (அகஸ்டாவெஸ்ட்லேண்ட்) வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் ரூ.3,600 கோடி முறைகேடாக பணபரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் இடைத்தரகராக செயல்பட்ட ராஜீவ் சக்சேனா கைது செய்யப்பட்டு, சமீபத்தில் உடல்நலக்குறைவால் ஜாமீன் பெற்றுள்ளார்.


கடந்த 6-ந்தேதி நீதிபதி அறையில் நடந்த ரகசிய விசாரணையில் சக்சேனா அப்ரூவராக விரும்புவதாக வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலம் வழக்கை விசாரித்துவரும் சிறப்பு நீதிபதி அரவிந்த்குமாருக்கு அனுப்பப்பட்டது. டெல்லி கோர்ட்டு இதுபற்றி அமலாக்கத்துறையின் கருத்தை கேட்டது. கோர்ட்டில் இன்று அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், ராஜீவ் சக்சேனா அப்ரூவர் ஆவதில் ஆட்சேபனை இல்லை. அது அமலாக்கத்துறைக்கு உதவியாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வருகிற 25-ந்தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு; மோகன் குப்தா நீதிமன்ற காவல் வருகிற 20ந்தேதி வரை நீட்டிப்பு
ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழலில் கைது செய்யப்பட்ட பாதுகாப்பு துறை முகவர் மோகன் குப்தாவின் நீதிமன்ற காவல் வருகிற 20ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
2. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: குற்றப்பத்திரிகை தகவல் வெளியானது எப்படி? விசாரணை கேட்டு கோர்ட்டில் இடைத்தரகர் மனு
“ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில், துணை குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல்கள் ஊடகங்களில் வெளியானது எப்படி?” என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று டெல்லி கோர்ட்டில் இடைத்தரகர் மனு தாக்கல் செய்தார்.
3. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: ராஜீவ் சக்சேனா அப்ரூவராக மாற சி.பி.ஐ கோர்ட்டு அனுமதி
ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைதான இடைத்தரகர் ராஜீவ் சக்சேனா அப்ரூவராக மாறுவதற்கு, சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.
4. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன் - டெல்லி கோர்ட்டு உத்தரவு
ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில், துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.
5. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு; இடைத்தரகர் மிசெலின் ஜாமீன் மனு தள்ளுபடி
ரூ.3,600 கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகர் மிசெலின் ஜாமீன் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.