தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் - நாளை வெளியாகிறது + "||" + Parliamentary Election: YSR Congress candidate list - tomorrow is out

நாடாளுமன்ற தேர்தல்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் - நாளை வெளியாகிறது

நாடாளுமன்ற தேர்தல்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் - நாளை வெளியாகிறது
நாடாளுமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தங்களது கட்சி வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிடுகிறது.
நகரி,

நாடாளுமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நாளை (சனிக்கிழமை) வெளியிடப்படும் என அக்கட்சியின் செயலாளர் ரகுராம் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 13-ந்தேதி வெளியிடுவதாக இருந்தது. கட்சியில் முக்கிய நிர்வாகிகள் இணைந்ததால் குறிப்பிட்ட நேரத்தில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட முடியாமல் போனது, அதை நாளை (சனிக்கிழமை) தள்ளிவைத்தோம். அதன்படி நாளை கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தனது தந்தையாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுகிறார். அன்றைய தினமே அவர் குண்டூர் மாவட்டத்தில் தனதுதேர்தல் பிரசாரத்தையும் தொடங்குகிறார்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - அன்புமணி ராமதாஸ் பேச்சு
‘நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும்’ என்று தர்மபுரியில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
2. நாடாளுமன்ற தேர்தலில் ‘காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்காது, ஆனால் ஆட்சி அமைக்கும்’ - பிரிதிவிராஜ் சவான் கூறுகிறார்
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்காது, ஆனால் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பிரிதிவிராஜ் சவான் கூறியுள்ளார்.
3. நாடாளுமன்ற தேர்தலையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கை: மாநிலம் முழுவதும் 33 ஆயிரம் பேர் கைது - டி.ஜி.பி. சுபோத் ஜெய்ஸ்வால் தகவல்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் 33 ஆயிரம் போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மராட்டிய போலீஸ் டி.ஜி.பி. சுபோத் ஜெய்ஸ்வால் கூறினார்.
4. நாடாளுமன்ற தேர்தல்; தமிழகம் முழுவதும் முதல் நாளான இன்று 20 பேர் வேட்பு மனு தாக்கல்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தமிழகம் முழுவதும் முதல் நாளான இன்று 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
5. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.