தேசிய செய்திகள்

“மோடியால் சாத்தியப்படும்” - பா.ஜனதாவின் தேர்தல் கோஷம் + "||" + 'Modi makes it possible' - BJP election slogan

“மோடியால் சாத்தியப்படும்” - பா.ஜனதாவின் தேர்தல் கோஷம்

“மோடியால் சாத்தியப்படும்” - பா.ஜனதாவின் தேர்தல் கோஷம்
மோடியால் சாத்தியப்படும் என்ற வாசகம், பா.ஜனதாவின் தேர்தல் கோஷமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

‘மோடியால் சாத்தியப்படும்’. இதுதான், நாடாளுமன்ற தேர்தலுக்கு பா.ஜனதாவின் கோஷமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய நிதி மந்திரியும், பா.ஜனதா பிரசார குழுவின் தலைவருமான அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் கூறியதாவது:-

மோடி கடந்த 5 ஆண்டுகளில் 24 மணி நேரமும் பணியாற்றி உள்ளார். விரைவாக புரிந்து கொள்ளக்கூடிய அவர், சிக்கலான பிரச்சினைகளில் விரைவாக முடிவெடுத்து அமல்படுத்தினார். ‘செயல்படக்கூடியவர்’ என்ற அவரது நற்பெயர், பெரும்பாலான இந்தியர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அவரது ஆட்சியில், வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா உயர்ந்துள்ளது. பணவீக்கம் குறைந்துள்ளது. ஊழலற்ற ஆட்சியை அளித்துள்ளார். அதே அரசு எந்திரத்தை கொண்டு, மோடி இச்சாதனையை படைத்துள்ளார். எனவே, ‘மோடியால் சாத்தியப்படும்’ என்ற கோஷத்தை தேர்வு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டமன்ற தேர்தலில் மும்பையில் 36 தொகுதிகளையும் பா.ஜனதா- சிவசேனா கைப்பற்ற வேண்டும் தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு
மும்பையில் உள்ள 36 தொகுதிகளையும் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி கைப்பற்ற வேண்டும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.
2. முன்னாள் பிரதமர் மகன் பா.ஜனதாவில் இணைந்தார்
முன்னாள் பிரதமர் மகன் பா.ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
3. ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் கூட்டணி அரசை கவிழ்க்க ரகசியமாக காய் நகர்த்திய பா.ஜனதா - பரபரப்பு தகவல்கள்
கூட்டணி அரசை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை மூலம் பா.ஜனதா ரகசியமாக காய்நகர்த்திய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
4. மாநிலங்களவை இடைத்தேர்தல் : குஜராத்தில் 65 எம்.எல்.ஏ.க்களை இடம்மாற்றுகிறது காங்கிரஸ்
குஜராத் மாநிலத்தில் இரண்டு மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான இடைத்தேர்தல் வரும் 5-ம் தேதி நடக்கிறது.
5. லஞ்ச–ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு, யோகி அரசு அதிரடி
உ.பி.யில் லஞ்ச–ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேரை கட்டாய பணி ஓய்வில் அனுப்பி யோகி ஆதித்யநாத் அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.