தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று நடைபெறும் கூட்டத்தில் எதிர்கால திட்டம் பற்றி முடிவு செய்வோம் - சந்திரபாபு நாயுடு + "||" + We will decide on a future project in Delhi today - Chandrababu Naidu

டெல்லியில் இன்று நடைபெறும் கூட்டத்தில் எதிர்கால திட்டம் பற்றி முடிவு செய்வோம் - சந்திரபாபு நாயுடு

டெல்லியில் இன்று நடைபெறும் கூட்டத்தில் எதிர்கால திட்டம் பற்றி முடிவு செய்வோம் - சந்திரபாபு நாயுடு
டெல்லியில் இன்று நடைபெறும் கூட்டத்தில் எதிர்கால திட்டம் பற்றி முடிவு செய்வோம் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
நகரி,

நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திராவில் முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதுகுறித்து ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆந்திராவில் முதல் கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்து உள்ளனர். மாநிலத்தில் இதுவரை எப்போதும் முதல் கட்ட தேர்தல் நடந்ததே இல்லை. இந்த முறை வேண்டுமென்றே முதல் கட்டத்தில் தேர்தல் வைத்து வேட்பாளர்கள் தேர்வு, பிரசாரத்தில் நான் பின்தங்கிவிடுவேன் என நினைத்தார்கள். ஆனால் எனது 40 ஆண்டு கால அரசியலில் எப்போதும் இல்லாத அளவுக்கு வேட்பாளர்கள் தேர்வு கட்சி தொண்டர்களின் ஆதரவோடு நடந்து உள்ளது. பிரதமர் மோடி காவல்காரன் என்ற பெயரில் குற்றவாளிகளை கையில் வைத்துக்கொண்டு நாட்டை சுரண்ட ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.


பிரதமர் மோடி, சந்திரசேகரராவ் உதவியுடன் ஜெகன்மோகன் ரெட்டியை தேர்தலில் வெற்றி பெற சதி திட்டம் தீட்டியுள்ளார். பா.ஜனதா கட்சிகள் அல்லாத எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள இன்று(வெள்ளிக்கிழமை) டெல்லிக்கு செல்கிறேன். எதிர்கால திட்டம் குறித்து அந்த கூட்டத்தில் முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் 7 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் -அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை
டெல்லியில் 7 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #AravindKejriwal
2. டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
நடிகர்கள் மோகன்லால், பிரபுதேவா, மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், பாடகர் சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி உள்பட 47 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
3. டெல்லியில் அரசு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
தலைநகர் டெல்லியில் உள்ள அரசு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
4. டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லையென காங்கிரஸ் அறிவிப்பு
டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லையென காங்கிரஸ் அறிவித்துள்ளது.
5. டெல்லியில் கடும் பனி மூட்டம்: 12 ரயில்கள் தாமதம்
டெல்லியில் கடும் பனி மூட்டம் நிலவியது. இதன் காரணமாக 12 ரயில்கள் தாமதம் ஆகின.