தேசிய செய்திகள்

பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு இன்று சம்பளம் கிடைக்கும் - நிர்வாக இயக்குனர் அறிவிப்பு + "||" + BSNL. Employees today get a salary - Executive Director announcement

பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு இன்று சம்பளம் கிடைக்கும் - நிர்வாக இயக்குனர் அறிவிப்பு

பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு இன்று சம்பளம் கிடைக்கும் - நிர்வாக இயக்குனர் அறிவிப்பு
பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு இன்று சம்பளம் கிடைக்கும் என்று நிர்வாக இயக்குனர் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள 1.76 லட்சம் பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஊழியர்கள் மார்ச் மாத சம்பளம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இதுபற்றி பி.எஸ்.என்.எல். தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனுபம் ஸ்ரீவஸ்தவா ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.


அதில், “பி.எஸ்.என்.எல். தனது ஊழியர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சம்பளம் வழங்கும். மார்ச் மாதத்தில் ரூ.2,700 கோடி இயல்பான வருவாய் வரும் என எதிர்பார்த்தோம். இதில் ரூ.850 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது. மூலதன தேவைக்காக ரூ.3,500 கோடி வங்கிக்கு செலுத்த இருக்கிறோம். இதன்மூலம் இனிவரும் மாதங்களில் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படாது. உரிய நேரத்தில் இந்த பிரச்சினையில் தலையிட்டு உதவிய தொலைதொடர்பு மந்திரி மனோஜ் சின்ஹாவுக்கும், தொலைதொடர்பு சேவையை தொடர்ந்து வழங்கிவந்த ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்று வழங்கப்படுகின்றன - ஜனாதிபதி வழங்குகிறார்
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை இன்று ஜனாதிபதி வழங்குகிறார்.
2. தஞ்சையில், இன்று மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு எழுத்து தேர்வு - 2,069 பேர் எழுதுகின்றனர்
தஞ்சையில் இன்று நடக்கும் மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான எழுத்து தேர்வை 2,069 பேர் எழுதுகின்றனர்.
3. ஐ.சி.சி. செயற்குழு கூட்டம் இன்று தொடங்குகிறது - முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை
ஐ.சி.சி.யின் செயற்குழு கூட்டம் துபாயில் இன்று தொடங்குகிறது. இதில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.
4. காஷ்மீர் தாக்குதல்: மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்
காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
5. டெல்லியில் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம் - ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி போராட்டம்
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி, டெல்லியில் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளார்.