உலக செய்திகள்

நியூசிலாந்தில் உள்ள மசூதியில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி என தகவல் + "||" + Multiple Deaths Reported In New Zealand Mosque Shooting, Gunman Active

நியூசிலாந்தில் உள்ள மசூதியில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி என தகவல்

நியூசிலாந்தில் உள்ள மசூதியில் துப்பாக்கிச்சூடு:  6 பேர் பலி என தகவல்
கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மசூதியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதையடுத்து, நிகழ்விடத்தை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.
கிறிஸ்ட்சர்ச்,

நியூசிலாந்து நாட்டின்  முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதி ஒன்றில் அடையாளம் தெரியாத நபர்  துப்பாக்கிச்சூடு நடத்தியதாக  தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் போலீசார் மசூதியை சுற்றி வளைத்து பதிலடி கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன. 

இதற்கிடையே, துப்பாக்கிச்சூடு நடைபெற்ற ஹாக்லே பார்க் பகுதியில் உள்ள மசூதிக்கு வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள்  சென்று இருந்ததாகவும்  எனினும் பத்திரமாக திரும்பியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. வங்காளதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பாலும் இந்த தகவலை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மிகவும் அபாயகரமான அனுபவமாக இருந்ததாக தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.

போலீசாருக்கும் துப்பாக்கி ஏந்திய நபர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மத்திய கிறிஸ்ட்சர்ச் பகுதி வாசிகள், வீதிகளுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் சந்தேகத்துகுரிய நடமாட்டங்கள் குறித்து உடனடியாக தகவல் அறிவிக்க வேண்டும் எனவும் கிறிஸ்ட்சர்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர். 

துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். வேறு யாரேனும் உள்ளார்களா? என போலீசார் தேடி வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்லியம்சனுக்கு மூன்று விருது
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் ஆண்டுதோறும் கிரிக்கெட்டில் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.
2. நியூசிலாந்தில் துப்பாக்கிகள் விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்து அந்நாட்டு பிரதமர் நடவடிக்கை
நியூசிலாந்தில் துப்பாக்கிகள் விற்பனைக்கு கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்து அந்நாட்டு பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
3. மசூதி தாக்குதல் எதிரொலி: நியூசிலாந்தில் துப்பாக்கி வைத்திருக்க கடும் கட்டுப்பாடு
மசூதிகளில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, நியூசிலாந்தில் மக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க மந்திரிசபை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
4. உலகைச்சுற்றி...
நியூசிலாந்தில் இருவேறு மசூதிகளில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியர்கள் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர்.
5. நியூசிலாந்து துப்பாக்கிச்சூட்டில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு, 5 பேர் இந்தியர்கள்
நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் 5 பேர் இந்தியர்கள் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.