உலக செய்திகள்

நியூசிலாந்து: துப்பாக்கிச்சூட்டில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினர் வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் + "||" + Shooting Reported At Second Mosque In New Zealand's Christchurch: Updates

நியூசிலாந்து: துப்பாக்கிச்சூட்டில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினர் வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள்

நியூசிலாந்து: துப்பாக்கிச்சூட்டில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினர் வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள்
நியூசிலாந்து மசூதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருந்து வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
கிறிஸ்ட்சர்ச்,

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் டீன்ஸ் அவ் பகுதியில் ஹெக்லி பார்க் அருகே மிகப்பெரிய மசூதி இருக்கிறது. இந்த மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை என்பதால், நண்பகல் தொழுகை நடந்தது. 

அப்போது, திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினார். இதனால், தொழுகையில் ஈடுபட்டிருந்த மக்கள் பலர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினார்கள், பலர் தரையில் படுத்துக்கொண்டனர். ஆனால், துப்பாக்கிச் சூடு 10 முதல் 15 நிமிடங்கள் வரை நீடித்ததாக அதை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதைபோன்று கிறிஸ்ட் சர்ச்சில் உள்ள மற்றொரு மசூதியிலும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. 

 சந்தேக நபர் ஒருவர் பிடிபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வேறு யாரேனும் அப்பகுதியில் உள்ளனரா? என போலீசார் தேடி வருகின்றனர்.  

நியூசிலாந்தின் கருப்பு தினங்களில் இதுவும் ஒன்று என அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அர்தன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் முன்னெப்போதும் இல்லாத வன்முறை செயல் ஆகும். ஒரு நபரை போலீசார் பிடித்துள்ளனர். பிடிபட்ட நபரை பற்றிய மேலதிக விவரங்கள் என்னிடம் இல்லை” என்றார். 

இதற்கிடையே, டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து  சென்றுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணியினர், துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த  மசூதிக்கு செல்ல இருந்துள்ளனர். அவர்கள், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும், அங்கிருந்து பத்திரமாக தப்பி சென்றனர். 

இது குறித்து வங்கதேச கிரிக்கெட் அணியின் செய்தித் தொடர்பாளர் ஜலால் யூனுஸ் கூறுகையில், " அனைத்து கிரிக்கெட் வீரர்களும் மசூதிக்கு செல்வதற்காக பஸ்ஸில் மசூதிக்கு வந்தோம். மசூதி வளாகத்துக்குள் சென்றபோது துப்பாக்கிச் சூடு நடந்ததால் அங்கிருந்து ஓடி உயிர் தப்பினோம். யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால், அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள். வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. உலகைச்சுற்றி...
நியூசிலாந்தின் கெர்மடெங் தீவை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
2. மீண்டும் அதுபோல நடக்காது என்று நம்புகிறோம்: ஓவர் த்ரோ குறித்து வில்லியம்சன் கருத்து
கோப்பையை வெல்ல தகுதியான அணி இங்கிலாந்து என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் தெரிவித்தார்.
3. நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்லியம்சன் புதிய சாதனை
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்லியம்சன் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
4. உலக கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி ஆட்டம்: நியூசிலாந்து, பாகிஸ்தான் யாருக்கு வாய்ப்பு?
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்திற்கான வாய்ப்பு நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளில் யாருக்கு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
5. நியூசிலாந்தில் பயங்கரம்: விமானங்கள் நேருக்கு நேர் மோதல்; 2 விமானிகள் பலி
நியூசிலாந்தில் விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 விமானிகள் பலியாயினர்.