தேசிய செய்திகள்

எல்லைப்பகுதியில் இந்திய விமானப்படையினர் பிரம்மாண்ட பயிற்சியில் ஈடுபட்டதாக தகவல் + "||" + IAF carries out major readiness exercise along Pakistan border

எல்லைப்பகுதியில் இந்திய விமானப்படையினர் பிரம்மாண்ட பயிற்சியில் ஈடுபட்டதாக தகவல்

எல்லைப்பகுதியில் இந்திய விமானப்படையினர் பிரம்மாண்ட   பயிற்சியில் ஈடுபட்டதாக தகவல்
எல்லைப்பகுதியில் இந்திய விமானப்படையினர் நேற்று பிரம்மாண்ட பயிற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,

இந்திய விமானப்படை  நேற்று இரவு பஞ்சாப் மற்றும் ஜம்முவை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் மிகப்பெரிய தயார் நிலை ஒத்திகையில்  ஈடுபட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த ஒத்திகைப் பயிற்சியில் பெரிய எண்ணிக்கையில் போர் விமானங்கள் ஈடுபட்டன. 

இந்த பயிற்சியில், அதிக வேகத்தில் விமானங்கள் பறந்து பயிற்சியில் ஈடுபட்டதாக விமானப்படை வட்டார தகவல்கள் கூறுகின்றன. பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தால் பதிலடி கொடுப்பதற்கான தயார் நிலைக்காக இந்த பிரம்மாண்ட பயிற்சி நடைபெற்றதாக தெரிகிறது. 

ஜெய்ஷ் இ முகம்மது இயக்க முகாம் மீது இந்திய விமானப் படைகள் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு பிறகு, இந்திய விமானப்படை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 7–வது நாளாக நீடித்த பாகிஸ்தான் குண்டுவீச்சில் பெண் பலி; ராணுவ வீரர் காயம்
எல்லைப்பகுதியில் 7–வது நாளாக பாகிஸ்தான் குண்டு வீசியதில் ஒரு பெண் பலியானார். ஒரு ராணுவ வீரர் காயம் அடைந்தார். பதற்றம் காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.