கிரிக்கெட்

கிறிஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூடு : வங்காளதேசம் - நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி ரத்து + "||" + Christchurch Shooting: New Zealand, Bangladesh Third Test Called Off

கிறிஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூடு : வங்காளதேசம் - நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி ரத்து

கிறிஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூடு : வங்காளதேசம் - நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி ரத்து
கிறிஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து வங்காளதேசம் - நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்ட்சர்ச்,

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் டீன்ஸ் அவ் பகுதியில் ஹெக்லி பார்க் அருகே மிகப்பெரிய மசூதி இருக்கிறது. இந்த மசூதியில் இன்று அடையாளம் தெரியாத  துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகினர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக  ஒரு பெண் உட்பட 4 பேர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் இன்னும் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

 டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து  சென்றுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணியினர், துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த  மசூதிக்கு செல்ல இருந்துள்ளனர். அவர்கள், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும், அங்கிருந்து பத்திரமாக தப்பி சென்றனர். 

இதற்கிடையே, நியூசிலாந்து - வங்காளதேசம் இடையேயான டெஸ்ட் நாளை நடைபெற இருந்த நிலையில்,  டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.  3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகித்த நிலையில், 3-வது போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. உலகைச்சுற்றி...
நியூசிலாந்தின் கெர்மடெங் தீவை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
2. மீண்டும் அதுபோல நடக்காது என்று நம்புகிறோம்: ஓவர் த்ரோ குறித்து வில்லியம்சன் கருத்து
கோப்பையை வெல்ல தகுதியான அணி இங்கிலாந்து என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் தெரிவித்தார்.
3. நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்லியம்சன் புதிய சாதனை
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்லியம்சன் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
4. உலக கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி ஆட்டம்: நியூசிலாந்து, பாகிஸ்தான் யாருக்கு வாய்ப்பு?
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்திற்கான வாய்ப்பு நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளில் யாருக்கு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
5. நியூசிலாந்தில் பயங்கரம்: விமானங்கள் நேருக்கு நேர் மோதல்; 2 விமானிகள் பலி
நியூசிலாந்தில் விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 விமானிகள் பலியாயினர்.