உலக செய்திகள்

மசூதி துப்பாக்கி சூடு: நாட்டின் கறுப்பு நாள் நியூசிலாந்து பிரதமர் கண்டனம் + "||" + ‘This is New Zealand’s darkest day’: Prime Minister Jacinda Ardern responds to Christchurch shootings

மசூதி துப்பாக்கி சூடு: நாட்டின் கறுப்பு நாள் நியூசிலாந்து பிரதமர் கண்டனம்

மசூதி துப்பாக்கி சூடு:   நாட்டின் கறுப்பு நாள்  நியூசிலாந்து  பிரதமர் கண்டனம்
மசூதி துப்பாக்கி சூட்டில் 30 பேர் பலியாகி உள்ளனர் இது நாட்டின் கறுப்பு நாள் என்று நியூசிலாந்து பிரதமர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
கிறிஸ்ட்சர்ச்,

நியூசிலாந்து நாட்டின்  முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல் நூர்  மசூதியில் அடையாளம் தெரியாத நபர்  துப்பாக்கிச்சூடு நடத்தியதாக  தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் போலீசார் மசூதியை சுற்றி வளைத்து பதிலடி கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில்  முதல் கட்டமாக 6 பேர் பலியானதாக  தகவல் வந்தது. தற்போது பலியானவ்ர்கள் எண்ணிக்கை 30  ஆக உயர்ந்து உள்ளது. 2-வது  துப்பாக்கி சூடு லின்வுட் புறநகர் பகுதி மசூதியில்  நடந்தது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

துப்பாக்கிச்சூடு தொடர்பாக 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். வேறு யாரேனும் உள்ளார்களா?  இது போல் நகரில்  பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் நிரப்பிய கார்களை போலீசார் கண்டறிந்து அப்புறப்படுத்தி உள்ளனர்.

துப்பாக்கி சூடு குற்றவாளி  "ப்ரெண்டான் டாரன்ட்" என்று பெயரிடப்பட்ட ஒரு ஆஸ்திரேலியராக ட்விட்டரில் தன்னை அடையாளம் காட்டி உள்ளான்.   73 பக்கத்தில் தனது நோக்கங்களை அதில் அவன்  தெரிவித்து உள்ளான்.

துப்பாக்கி சூடு  தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டன் கூறியதாவது:-

"நியூசிலாந்தில் இதற்கு முன் இதுபோன்ற மோசமான வன்முறைச் செயல்கள் நடந்ததில்லை. அதற்கு இடமும் இல்லாமல் இருந்தது. அப்படி இருக்கையில் இன்று நடந்த வன்முறைச் செயலை நியூசிலாந்தின் கறுப்பு நாள் என்று சொல்வேன்.

மக்கள் சுதந்திரமாக தங்கள் வழிபாட்டை நடத்தி வந்த இடத்தில், பாதுகாப்பாக இருந்த இடத்தில் இந்த மோசமான துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. இந்த செயலைச் செய்தவர்கள் திட்டமிட்டு இதை நிகழ்த்தியுள்ளார்கள். இதுபோன்ற செயலுக்கு நியூசிலாந்து சமூகத்தில் இடமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூடு பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு
நியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூட்டில் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்து உள்ளது.