மாநில செய்திகள்

கோவிலில் தாமரை கோலங்கள் அழிப்பு, தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் + "||" + EC officials masked lotus rangoli designs in Srivilliputhur Andal Temple

கோவிலில் தாமரை கோலங்கள் அழிப்பு, தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்

கோவிலில் தாமரை கோலங்கள் அழிப்பு, தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்
பா.ஜனதா சின்னமென ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வரையப்பட்டிருந்த தாமரை கோலங்கள் அழிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண வைபவ விழாவிற்காக தாமரை வடிவிலான கோலங்கள் சுண்ணாம்பு கலவையால் வரையப்பட்டுள்ளது. இந்த கோலங்கள் தேர்தல் அதிகாரிகளால் கட்சி சின்னமென வெள்ளை சுண்ணாம்பு பூசி மறைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு  தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பொதுமக்களால் வழக்கப்படி ஆண்டாண்டு காலமாக வரையப்படும் தாமரை கோலத்தை அழித்த அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறோம். மஹாலஷ்மி அமர்ந்திருக்கும் தாமரையை பக்தி நோக்கத்தோடு பொதுமக்கள் வரைந்திருக்கின்றனர். தேர்தல் நோக்கத்தோடு வரையப்பட்டது அல்ல. 

அப்படியென்றால் கை காண்பித்தால் தேர்தல் சின்னம் என்று கையை உடம்பிலிருந்து அகற்றி விடுவீர்களா? தினமும் சூரியன் உதிக்கின்றது தேர்தல் சின்னம் என்று சூரியனை மறைத்து விடுவீர்களா? இந்துமத பழக்கங்களையும், உணர்வுகளையும் அதிகாரத்தின் பெயரால் அழிக்க முற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்" என கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு போங்கள் ; குமாரசாமி மீது பா.ஜனதா சாடல்
அரசியல் சாசனம் மற்றம் மக்கள் மீது மதிப்பு வைத்திருந்தால் உடனே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு போங்கள் என்று குமாரசாமி மீது பா.ஜனதா சாடியுள்ளது.
2. சட்டமன்ற தேர்தலில் மும்பையில் 36 தொகுதிகளையும் பா.ஜனதா- சிவசேனா கைப்பற்ற வேண்டும் தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு
மும்பையில் உள்ள 36 தொகுதிகளையும் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி கைப்பற்ற வேண்டும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.
3. முன்னாள் பிரதமர் மகன் பா.ஜனதாவில் இணைந்தார்
முன்னாள் பிரதமர் மகன் பா.ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
4. ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் கூட்டணி அரசை கவிழ்க்க ரகசியமாக காய் நகர்த்திய பா.ஜனதா - பரபரப்பு தகவல்கள்
கூட்டணி அரசை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை மூலம் பா.ஜனதா ரகசியமாக காய்நகர்த்திய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
5. மாநிலங்களவை இடைத்தேர்தல் : குஜராத்தில் 65 எம்.எல்.ஏ.க்களை இடம்மாற்றுகிறது காங்கிரஸ்
குஜராத் மாநிலத்தில் இரண்டு மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான இடைத்தேர்தல் வரும் 5-ம் தேதி நடக்கிறது.