தேசிய செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்திற்காக மூன்று நாட்கள், 140 கி.மீ. தூரம் , கங்கை நதிக்கரையில் படகு பயணம் மேற்கொள்ளகிறார் பிரியங்கா காந்தி + "||" + Congress General Secretary UP-East, Priyanka Gandhi Vadra to take a 3-day

தேர்தல் பிரச்சாரத்திற்காக மூன்று நாட்கள், 140 கி.மீ. தூரம் , கங்கை நதிக்கரையில் படகு பயணம் மேற்கொள்ளகிறார் பிரியங்கா காந்தி

தேர்தல் பிரச்சாரத்திற்காக மூன்று நாட்கள், 140 கி.மீ. தூரம் , கங்கை நதிக்கரையில் படகு பயணம் மேற்கொள்ளகிறார் பிரியங்கா காந்தி
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பிரியங்கா காந்தி, 3 நாட்கள் கங்கை நதிக்கரையில் படகு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி உள்ளன.  காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். இந்த ஆண்டு அவருடன் பிரியங்கா காந்தியும் முழுநேர அரசியலில் ஈடுபட்டு இருக்கிறார். உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டு அந்த மாநிலத்தில் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ள பிரியங்கா காந்தி,  உத்தரப்பிரதேசத்தில் உள்ள கங்கை நதிக்கரையில் படகு பயணம் மேற்கொள்ள உள்ளதாக  அக் கட்சி அறிவித்துள்ளது.

உ.பி.யில் தேர்தல் பிரசாரம் தொடங்க உள்ள பிரியங்கா, கங்கை நதிக்கரையில் மூன்று நாட்கள் படகு பயணம் மேற்கொள்ள உள்ளார். 

வரும் 18-ம் தேதி பிரயாகராஜ் நகரின் சத்நாக் பகுதியிலிருந்து தொடங்கி 140 கி.மீ. தூரம் படகில் பயணித்து அங்குள்ள கிராமங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொள்கிறார். கங்கா யாத்ரா என பெயரிடப்பட்டுள்ள இந்த பயணம் சத்நாக் பகுதியிலிருந்து தொடங்கி வாரணாசியின் அஸி காட் வரை செல்கிறார் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் விஜேந்திர திரிபாதி தெரிவித்துள்ளார். 

நதிக்கரை வழியாக பிரசாரம் செய்யும் முதல் தலைவர் பிரியங்கா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.