உலக செய்திகள்

மசூத் அசாரை கைது செய்ய போவதில்லை - பாகிஸ்தான் முடிவு + "||" + Cannot take action against JeM chief Masood Azhar Pakistan

மசூத் அசாரை கைது செய்ய போவதில்லை - பாகிஸ்தான் முடிவு

மசூத் அசாரை கைது செய்ய போவதில்லை -  பாகிஸ்தான் முடிவு
இந்தியா அளித்தது உறுதியான ஆதாரங்கள் இல்லை. எனவே மசூத் அசாரை கைது செய்ய போவதில்லை என்று பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
இஸ்லாமாபாத்,  

புல்வாமா தாக்குதலை அடுத்து ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நா.வில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை சீனா தடுத்து விட்டது. பயங்கரவாதம் மீது நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்கை வெளியிட்ட பாகிஸ்தானிடம்  புல்வாமா தாக்குதலில் மவுலானா மசூத் அசார் மற்றும் அந்த இயக்கத்தின் தொடர்பை நிரூபிக்க தேவையான ஆதாரங்களை இந்தியா வழங்கியது. 

அவற்றை ஆய்வு செய்த பாகிஸ்தான் அரசு, மசூத் அசாரை கைது செய்யவோ, விசாரணைக்காக காவலில் வைக்கவோ போவதில்லை என்று முடிவு செய்துள்ளது. 

‘‘எந்த குற்றத்திலும் மசூத் அசாருக்கு எதிராக ஆதாரம் இல்லாத போது அவரை ஏன் நாங்கள் கைது செய்ய வேண்டும்?’’ என கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்தியா அளித்த தகவல்களை பாகிஸ்தான் உள்துறை அமைச்சகமும், விசாரணை அமைப்புகளும் ஆய்வு செய்தன. அதில், புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானியர் தொடர்புக்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இந்தியாவிடம் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளன. இந்தியா அளித்த ஆவணங்களில் கூறப்படுகிறது என்ற வார்த்தைதான் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானை குற்றம் சாட்ட எந்த ஆதாரமும் இல்லை என்பது தெளிவாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 10 இந்தியர்கள் உயிரிழப்பு - சுஷ்மா சுவராஜ்
இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 10 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என சுஷ்மா சுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
2. புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மொத்த ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் வேட்டை
புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மொத்த ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் வேட்டையாடப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினர் உஷார்
இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படை உஷார் நிலையில் ரோந்து பணியை மேற்கொள்கிறது.
4. இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் - அமெரிக்கா எச்சரிக்கை
இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
5. இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு
இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.