மாநில செய்திகள்

ஈரோடு மக்களவை தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு + "||" + MDMK candidate announced for Erode parliamentary constituencies

ஈரோடு மக்களவை தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு மக்களவை தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு
ஈரோடு மக்களவை தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
சென்னை,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பிடித்துள்ள மதிமுவுக்கு ஒரு மக்களவை தொகுதியும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மக்களவை தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 இந்த நிலையில், ஈரோடு மக்களவை தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அ.கணேசமூர்த்தி ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடுவார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். அ.கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளர் பொறுப்பை வகித்து வருகிறார். வரும் 19 ஆம் தேதி அ.கணேசமூர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. 2 அவதூறு வழக்குகளில் ஒரு வழக்கில் வைகோவை விடுவிக்க மறுப்பு
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 2 அவதூறு வழக்குகளில் ஒரு வழக்கில் அவரை விடுவித்த சென்னை ஐகோர்ட் மற்றொரு வழக்கில் விடுவிக்க மறுத்து விட்டது.
2. திருச்சி-ஈரோடு வழித்தட சேவையில் மாற்றம்: கரூர் பயணிகள் ரெயில் 28-ந் தேதி ரத்து
திருச்சி-ஈரோடு வழித்தட சேவையில் மாற்றம் காரணமாக, கரூர் பயணிகள் ரெயில் 28-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது.