உலக செய்திகள்

பாகிஸ்தான் எல்லை தாண்டிய தாக்குதல்களையும் தீவிரவாதிகளை வளர்ப்பதையும் நிறுத்த வேண்டும்- அமெரிக்கா + "||" + Pakistan needs to stop harbouring terrorists, prevent cross-border attacks: US

பாகிஸ்தான் எல்லை தாண்டிய தாக்குதல்களையும் தீவிரவாதிகளை வளர்ப்பதையும் நிறுத்த வேண்டும்- அமெரிக்கா

பாகிஸ்தான் எல்லை தாண்டிய தாக்குதல்களையும் தீவிரவாதிகளை வளர்ப்பதையும் நிறுத்த வேண்டும்- அமெரிக்கா
பாகிஸ்தான் எல்லை தாண்டிய தாக்குதல்களையும் தீவிரவாதிகளை வளர்ப்பதையும் நிறுத்த வேண்டும் என அமெரிக்கா கூறி உள்ளது.
வாஷிங்டன்

கடந்த புதன்கிழமை வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே உடனான ஒரு சந்திப்பில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் இந்தியாவிற்கு அமெரிக்காவின் ஆதரவை தெரிவித்தார்.

பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக "உறுதியான மற்றும் மீறமுடியாத நடவடிக்கை" எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் அமெரிக்காவும் இந்தியாவும் கேட்டுக் கொண்டன.

அமெரிக்கா இந்தியாவுக்கு  ஆதரவு தெரிவித்த அடுத்த நாள் ஜெய்ஷ்-இ-முகம்மது (ஜெ.எம்.எம்) தலைவர் மசூத் அசார் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவால் உலகளாவிய பயங்கரவாதியாக நியமிக்கப்படுவதற்கு இந்தியாவின் முயற்சியை சீனா தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்ப்போ கூறியதாவது:-

பாகிஸ்தான் தீவிரவாதிகளால்  கடந்த பிப்ரவரி 14 ந்தேதி  இந்தியாவில் என்ன நடந்தது  என்பதை நாங்கள் கண்டோம். தீவிரவாதிகளை   வளர்ப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். 

டொனால்டு டிரம்ப் நிர்வாகம் பாகிஸ்தானுக்கு எதிராக வேறு எந்த முந்தைய அரசாங்கங்களும் எடுக்காத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்துவதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்
போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் என்று முசாபராபாத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் இம்ரான் கான் பேசினார்.
2. இந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூளும் வாய்ப்பு உள்ளது - பாகிஸ்தான்
இந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூண்டு விட வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
3. அமெரிக்க பயணத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிபர் டிரம்பை இரண்டு முறை சந்திக்கிறார்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்க பயணத்தின் போது அதிபர் டிரம்பை இரண்டு முறை சந்தித்து பேச உள்ளார்.
4. இந்தியாவில் சமீபத்திய பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட மிகவும் பலவீனமாக உள்ளது- சர்வதேச நாணய நிதியம்
இந்தியாவில் சமீபத்திய பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட மிகவும் பலவீனமாக உள்ளது என சர்வதேச நாணய நிதிய செய்தி தொடர்பாளர் ஜெர்ரி ரைஸ் கூறி உள்ளார்.
5. அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு
அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.