மாநில செய்திகள்

பொள்ளாச்சி சம்பவத்தைப்போல் செல்போனில் ஆபாச படம் எடுத்து இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் + "||" + Like Pollachi incident Take the picture of porn on the cellphone Threatened young youth

பொள்ளாச்சி சம்பவத்தைப்போல் செல்போனில் ஆபாச படம் எடுத்து இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர்

பொள்ளாச்சி சம்பவத்தைப்போல் செல்போனில் ஆபாச படம் எடுத்து இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர்
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை தொடர்ந்து நாகை மாவட்டத்திலும் இளம்பெண்ணை மயக்கி ஆபாச படமெடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம்:

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை தொடர்ந்து நாகை மாவட்டத்திலும் இளம்பெண்ணை மயக்கி ஆபாச படமெடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:

நாகை வெளிப்பாளையம் பேட்டை தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் சுந்தர் (வயது 23). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ஆழியூர் தெற்கு தெருவை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் நாகையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

சுந்தர் அந்த கடைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது சுந்தருக்கும் ஆழியூரை சேர்ந்த அந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் அவர்களை காதலர்களாக மாற்றி உள்ளது. இதையடுத்து இருவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் காதலன் சுந்தரின் நடவடிக்கையில் இளம்பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர் சுந்தரிடமிருந்து விலகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தர் இளம்பெண்ணை மீண்டும் தன்னுடன் பழக வைக்க ஒரு திட்டம் தீட்டியுள்ளார்.

இதையடுத்து சுந்தர் மீண்டும் தனது காதலியான அந்த இளம்பெண்ணை சந்தித்து சாமர்த்தியமாக மயக்குவது போல் பேசி நட்பை நீட்டித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் அவரின் நம்பிக்கைக்கு உரியவராக நடித்துள்ளார்.

இந்நிலையில் காதலியிடம் நாம் காரைக்கால் கோவிலுக்கு சென்று வருவோம் என்று கூறி அழைத்துள்ளார். காதலன் மேல் இருந்த நம்பிக்கையில் அந்த இளம்பெண்ணும் சுந்தருடன் வர சம்மதித்துள்ளார்.

இதையடுத்து தனது காதலியை காரைக்கால் பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்ற சுந்தர் அங்கு ஒரு அறையில் தங்கியுள்ளனர். அப்போது குளிர்பானம் வாங்கி வந்த சுந்தர் அதை காதலியிடம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த குளிர்பானத்தை குடித்த அவர் சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார். தான் குளிர்பானத்தில் கலந்து கொடுத்த மயக்க மருந்தால் காதலி மயக்கமடைந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சுந்தர் அவரிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். மேலும் அதனை தனது செல்போனில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மயக்கம் தெளிந்து எழுந்த இளம்பெண் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்தாயா எனக் கேட்டு சத்தம் போட்டுள்ளார். அப்போது சுந்தர் தன் செல்போனில் பதிவு செய்த பதிவுகளை காட்டி மிரட்டியதோடு வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தால் இளம்பெண் மீண்டும் சுந்தரிடம் பேசுவதை நிறுத்தி விட்டாராம். ஆனால் தன் செல்போனில் தெரியாமல் எடுத்த படத்தை பற்றி இளம்பெண்ணிடம் கூறி அடிக்கடி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

கொலை மிரட்டலால் அதிர்ச்சியும், தன்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளதை அறிந்து அவமானமும் அடைந்த இளம்பெண் உடனடியாக இதுபற்றி கீழ்வேளூர் போலீசில் புகார் அளித்தார்.

இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்களை வாலிபர் சுந்தர் கூறியதாக தெரியவருகிறது. பல பெண்களிடம் காதலிப்பது போல் நடித்து அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி சம்பவத்தால் தமிழகமே கொந்தளித்து போய் உள்ள நிலையில் இளம்பெண்ணை ஆபாச படமெடுத்து வாலிபர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய பாலியல் பலாத்கார வீடியோக்கள் 90 சதவீதம் அழிப்பு: சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல்
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய 90 சதவீத வீடியோக்கள் அழிக்கப்பட்டு விட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.
2. பொள்ளாச்சி சம்பவம்: குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கி தருவோம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி
பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கி தருவோம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.
3. பொள்ளாச்சி சம்பவம்: திருநாவுக்கரசை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய திருநாவுக்கரசை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது.
4. பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி 2 பள்ளி மாணவிகள் மனு
பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி கோட்டாட்சியரிடம் 2 பள்ளி மாணவிகள் மனு அளித்தனர்.
5. பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: தாமாக முன்வந்து விசாரிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை ஐகோர்ட் நிராகரித்தது.