மாநில செய்திகள்

நியூசிலாந்தில் மசூதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் + "||" + Deputy Chief Minister O. Panneerselvam condemned

நியூசிலாந்தில் மசூதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

நியூசிலாந்தில் மசூதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
நியூசிலாந்தில் மசூதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறிஸ்ட் சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர். இந்த  சம்பவம் தொடர்பாக கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள ப்ரெண்டான் டாரன்ட் என்னும் 28 வயதான ஆஸ்திரேலியர் ஒருவர் இன்று (சனிக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஏப்ரல் 5ம்  தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

நியூசிலாந்து நாட்டில் நேற்று இருவேறு மசூதிகளில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அந்த நாட்டை உலுக்கி உள்ளன. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கண்டனம் தெரிவித்தார். இரு துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கும் உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- 

துப்பாக்கிச்சூடு சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.