தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பெண் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை + "||" + Terrorists today fired on a police woman Khushboo Jan at her village in Vehil area of Shopian district

ஜம்மு காஷ்மீரில் பெண் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பெண் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பெண் போலீஸ் அதிகாரி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள வாகில் பகுதியில் பெண் போலீஸ் அதிகாரி குஷ்பு ஜான்,  அவரது வீட்டின் வாசலில் வைத்து சுடப்பட்டார்.

இந்த தாக்குதலில் அவர் பலத்த காயமடைந்தார். தகவல் குறித்து விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் போலீசார் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.  இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அவரது குடும்பத்தினருக்கு துணை நிற்கிறோம், என்று கூறினர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் பெண் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.