தேசிய செய்திகள்

கல்லூரியில் காதல் பற்றி வகுப்பெடுத்த கணிதப்பேராசிரியர் பணி நீக்கம் + "||" + Attraction + closeness = Love: Karnal professor becomes love guru to college girls in maths class

கல்லூரியில் காதல் பற்றி வகுப்பெடுத்த கணிதப்பேராசிரியர் பணி நீக்கம்

கல்லூரியில் காதல் பற்றி வகுப்பெடுத்த கணிதப்பேராசிரியர் பணி நீக்கம்
ஈர்ப்பு + நெருக்கம் = காதல் என வகுப்பெடுத்த கல்லூரி பேராசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கவுகாத்தி,

அரியானா மாநிலத்தில் உள்ள கர்னலில் அரசு மகளிர் கல்லூரியில் பாடம் நடத்திய கணித பேராசிரியர் ஒருவர் நட்பு, ஈர்ப்பு, விருப்பம், காதல் ஆகியவற்றுக்கான வேறுபாட்டை மாணவிகளுக்கு விளக்கி கூறினார்.

ஈர்ப்போடு நெருக்கத்தை கூட்டினால் காதல் என்றும், நெருக்கத்தில் இருந்து ஈர்ப்பைக்கழித்தால் நட்பு என்றும் கூறினார். இதனை மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார். 

மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்காத நிலையில், வீடியோ வேகமாக பரவியதை அடுத்து கணிதப்பேராசிரியரை கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தனர். 

இதனையடுத்து அந்த கணித ஆசிரியரை பணிநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.