மாநில செய்திகள்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கதமிழக போலீஸ்துறையில் தனிப்பிரிவுகூடுதல் டி.ஜி.பி. தலைமையில் செயல்படும் + "||" + Women, children Against Crimes In Tamilnadu police Separate section

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கதமிழக போலீஸ்துறையில் தனிப்பிரிவுகூடுதல் டி.ஜி.பி. தலைமையில் செயல்படும்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கதமிழக போலீஸ்துறையில் தனிப்பிரிவுகூடுதல் டி.ஜி.பி. தலைமையில் செயல்படும்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தமிழக போலீஸ்துறையில் கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தலைதூக்கி உள்ளது. குழந்தைகளிடம் பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் நபர்கள் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான புகார்கள் மீது விசாரணை நடத்துவதற்காக மகளிர் போலீஸ்நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

பாலியல் வன்முறை சம்பவங்கள்

அருப்புக்கோட்டையில் மாணவிகளை பேராசிரியை நிர்மலா தேவி தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தற்போது பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவங்கள் பூதாகர பிரச்சினையாக வெடித்துள்ளது.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், இதற்காக போலீஸ்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தனி பிரிவு

இந்தநிலையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையாக தமிழக போலீஸ்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்த தமிழக அரசு இசைவு தெரிவித்து அரசாணை வெளியிட்டது.

அதனடிப்படையில் போலீஸ் டி.ஜி.பி. மேற்பார்வையில் கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் 3 போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் அடங்கிய பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

சி.பி.சி.ஐ.டி., மத்திய குற்றப்பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு, விபசார தடுப்புப்பிரிவு என்று போலீஸ்துறையில் ஒவ்வொரு குற்றங்களையும் விசாரிக்க தனி பிரிவு இருப்பது போன்று இந்த பிரிவும் செயல்பட உள்ளது.

விரைவில் அறிவிப்பு

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் இந்த பிரிவில் விரைவில் போலீஸ் அதிகாரிகளும், புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு எண்களும் வெளியிடப்பட உள்ளன.

சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தை தலைமையிடமாக கொண்டு மாவட்டந்தோறும் இந்த பிரிவு செயல்படும் என்று தெரிய வந்துள்ளது. இதற்காக முறைப்படி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மகாராஷ்டிராவில் பழங்குடி இன பெண்கள் அரசு பேருந்து ஓட்டுநர்களாக நியமனம்
மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் பணியில் பழங்குடி இன பெண்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
2. ஆடிப்பெருக்கையொட்டி காவிரி ஆற்றில் பெண்கள் வழிபாடு
ஆடிப்பெருக்கையொட்டி காவிரி ஆற்றில் ஏராளமான பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
3. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 1,023 விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவியல் வழக்குகளை விசாரிக்க 1,023 விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4. முசிறி போலீஸ் நிலையம் எதிரே நகைக்கடையில் வெள்ளிக்கொலுசுகளை திருடிய 2 பெண்கள் கைது
முசிறி போலீஸ் நிலையம் எதிரே நகைக்கடையில் 15 ஜோடிவெள்ளிக் கொலுசுகளை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
5. மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படும் -நிர்மலா சீதாராமன்
மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.