தேசிய செய்திகள்

பிரியங்காவின் வருகை பா.ஜனதாவை பாதிக்காது: உத்தரபிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத் + "||" + Priyanka's visit will not affect BJP: Uttar Pradesh Chief Minister Yogi Adithyanath

பிரியங்காவின் வருகை பா.ஜனதாவை பாதிக்காது: உத்தரபிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத்

பிரியங்காவின் வருகை பா.ஜனதாவை பாதிக்காது: உத்தரபிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத்
பிரியங்காவின் வருகை பா.ஜனதாவை பாதிக் காது என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத் கூறினார்.
லக்னோ,

உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அளித்த பேட்டி வருமாறு:-

காங்கிரஸ் கட்சி பிரியங்காவை இந்த முறை பொதுச்செயலாளராகவும், கிழக்கு உத்தரபிரதேச பொறுப்பாளராகவும் நியமித்துள்ளது. அவரது சேவையை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது தொடர்பான இது ஒரு உட்கட்சி பிரச்சினை. காங்கிரஸ் கட்சிக்காக அவர் இதற்கு முன்னரும் பிரசாரம் செய்திருக்கிறார், இந்த முறையும் பிரசாரம் செய்கிறார். அவரது வருகை தேர்தலில் பா.ஜனதாவை எந்தவகையிலும் பாதிக்காது.


சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி ஏற்கனவே ஒரு பிரச்சினையில் சிக்கியிருக்கிறது. குறிப்பிட்ட தொகுதிகளுக்காக இரண்டு கட்சிகளும் போட்டிபோடுகிறது. இந்த கூட்டணி முயற்சி தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு ‘பொய் அலாரம்’ தவிர வேறு ஒன்றுமில்லை.

நாடு யாருடைய கைகளில் இருந்தால் பாதுகாப்பாகவும், வளமாகவும் இருக்குமோ அவருக்கே, அந்த கட்சிக்கே மக்கள் ஓட்டு போடுவார்கள். பாகிஸ்தான் பாலகோட் தாக்குதலுக்கு பின்னர் பிரதமர் மோடியின் வலிமையான தலைமையின் கீழ் இந்தியா உலகில் சக்திமிக்க நாடாக உருவாகியுள்ளது.

ராமர் பற்றி ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியும். அவரை தங்கள் முன்மாதிரியாகவும் கருதுகிறார்கள். அனைவருக்கும் மகிழ்ச்சியும், பாதுகாப்பும் தேவை. முன்பு எதிர்க்கட்சிகளால் சாத்தியம் இல்லாதது, இப்போது மோடியின் தலைமையில் பா.ஜனதாவால் சாத்தியமாகி உள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் 74 இடங்களில் பா.ஜனதா வெற்றிபெறும்.

தொடர்புடைய செய்திகள்

1. சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்திற்கு சுவாமி விவேகானந்தரின் ரதம் வருகை
சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுவாமி விவேகானந்தரின் ரத யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2. விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் திருவானைக்காவல் வருகை
விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் நேற்று மதியம் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு இரவில் திருவானைக்காவல் வந்தார்.
3. நன்றி அறிவிப்பு பொதுக்கூட்ட தேதி மாற்றம்: தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வருகிற 10-ந்தேதி திருச்சி வருகை
தி.மு.க. நன்றி அறிவிப்பு பொதுக்கூட்ட தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. வருகிற 10-ந்தேதி திருச்சி வரும் மு.க.ஸ்டாலின் அண்ணா, கருணாநிதி, அன்பில் தர்மலிங்கம் சிலைகளையும் திறந்து வைக்கிறார்.
4. வசந்தகுமாருக்கு ஆதரவாக பிரசாரம் மு.க.ஸ்டாலின் இன்று குமரி வருகை
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார். அவர் நாகர்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
5. குமரிக்கு 8-ந் தேதி மு.க.ஸ்டாலின் வருகை பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார்
குமரிக்கு வருகிற 8-ந் தேதி (திங்கட்கிழமை) தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிறார். அங்கு நாகர்கோவிலில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரை ஆதரித்து பேசுகிறார்.