தேசிய செய்திகள்

மசூத் அசாரை சர்வதேச குற்றவாளியாக அறிவிப்பதில் இந்தியாவுக்கு உலகளவில் ஆதரவு உள்ளது - ராகுலுக்கு சுஷ்மா சுவராஜ் பதில் + "||" + India has global support for Masud Azar as an international criminal - Sushma Swaraj replied to Rahul

மசூத் அசாரை சர்வதேச குற்றவாளியாக அறிவிப்பதில் இந்தியாவுக்கு உலகளவில் ஆதரவு உள்ளது - ராகுலுக்கு சுஷ்மா சுவராஜ் பதில்

மசூத் அசாரை சர்வதேச குற்றவாளியாக அறிவிப்பதில் இந்தியாவுக்கு உலகளவில் ஆதரவு உள்ளது - ராகுலுக்கு சுஷ்மா சுவராஜ் பதில்
மசூத் அசாரை சர்வதேச குற்றவாளியாக அறிவிப்பதில் இந்தியாவுக்கு உலகளவில் ஆதரவு உள்ளது என ராகுலுக்கு சுஷ்மா சுவராஜ் பதில் அளித்துள்ளார்.
புதுடெல்லி,

ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச குற்றவாளியாக ஐ.நா. அறிவிப்பதற்கு சீனா தடுத்ததால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரை விமர்சனம் செய்திருந்தார். இதற்கு வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ள பதில் வருமாறு:-


மசூத் அசார் பற்றிய பரிந்துரை 4 முறை நடைபெற்றுள்ளது. 2009-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது இந்தியா தனியாக பரிந்துரை செய்தது. 2016-ல் இந்தியாவுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆதரவு தெரிவித்தது. 2017-லும் அந்த 3 நாடுகளும் பரிந்துரை செய்தன. ஆனால் இப்போது 2019-ல் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் 15-ல் 14 நாடுகள் ஆதரித்துள்ளன. உறுப்பினரல்லாத ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியாவுக்கு எதிர்பாராத அளவு ஆதரவு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத் தலைவர் மசூத் அசாரின் சொத்துக்களை முடக்கியது பிரான்சு
ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத் தலைவர் மசூத் அசாரின் சொத்துக்களை பிரான்சு அரசு முடக்கியது.
2. மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை: ராகுல் காந்தி கொண்டாடுவது ஏன்? - பா.ஜனதா கேள்வி
மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை போட்டதால், நாடே வேதனையில் இருக்கும்போது ராகுல் காந்தி கொண்டாட்ட மனநிலையில் இருப்பது ஏன்? என்று பா.ஜனதா கேள்வி விடுத்துள்ளது.
3. மசூத் அசார் விவகாரம் : சீனாவை தாண்டி வேறு நடவடிக்கைக்கு வாய்ப்பு
மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.
4. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை: இந்தியா கடும் அதிருப்தி
மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா 4-வது முறையாக முட்டுக்கட்டை போட்டுள்ளது.
5. மசூத் அசாருக்கு நற்சான்று அளித்தவர் அஜித் தோவல்: காங்கிரஸ்
மசூத் அசாருக்கு நற்சான்று அளித்தவர் அஜித் தோவல் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.