தேசிய செய்திகள்

2 நாள் சுற்றுப்பயணமாக மாலத்தீவு சென்றார் சுஷ்மா சுவராஜ் + "||" + Delhi: External Affairs Minister Sushma Swaraj emplanes for Maldives. She is on 2-day visit to the country from today.

2 நாள் சுற்றுப்பயணமாக மாலத்தீவு சென்றார் சுஷ்மா சுவராஜ்

2 நாள் சுற்றுப்பயணமாக மாலத்தீவு சென்றார் சுஷ்மா சுவராஜ்
2 நாள் சுற்றுப்பயணமாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மாலத்தீவு புறப்பட்டுச்சென்றார்.
புதுடெல்லி,

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு நாடான மாலத்தீவுக்கு இன்று காலை புறப்பட்டுச்சென்றார். இந்தச் சுற்றுப்பயணத்தின்போது, அந்நாட்டின் அதிபர், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டோரைச் சந்திக்கும் சுஷ்மா சுவராஜ், இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அவர்களுடன் விவாதிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பயணத்தின்போது, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா சாஹிப், பாதுகாப்பு அமைச்சர் மரியா அகமது தீதி, நிதியமைச்சர் இப்ராஹிம் அமீர், திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு அமைச்சர் முகமது அஸ்லாம், சாலை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஐசத் நகுலா, பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் பையஸ் இஸ்மாயில் உள்ளிட்டோரை சுஷ்மா சுவராஜ் சந்தித்துப் பேச உள்ளார்.

மாலத்தீவு அதிபராக இப்ராகிம் முகமது சோலி கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற பிறகு, இந்தியா சார்பில் அந்நாட்டுக்கு மேற்கொள்ளப்படும் முதல் அரசுமுறைப் பயணம் இதுவாகும். முன்னதாக, முகமது சோலி அதிபராகப் பதவியேற்கும்போது, பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார். எனினும், பதவியேற்பு விழாவில் மட்டுமே கலந்துகொண்ட அவர், அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.

முந்தைய அதிபர் அப்துல்லா யாமீன் ஆட்சியில் இருநாடுகளுக்கும் இடையே பலவீனம் அடைந்த நல்லுறவை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அமையும் சுஷ்மா சுவராஜ் பயணம் அமையும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு பங்களாவில் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ்
அரசு பங்களாவில் இருந்து வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வெளியேறினார்.
2. ஆந்திர மாநில ஆளுநராக நியமனம் : சுஷ்மா சுவராஜ் மறுப்பு
ஆந்திர மாநில ஆளுநராக முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டதாக நேற்று வெளியான தகவலை அவர் முற்றிலும் மறுத்துள்ளார்.
3. ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டார் என தகவல்
ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
4. கடந்த அமைச்சரவையில் தனக்கு வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி : சுஷ்மா சுவராஜ் உருக்கம்
மோடியின் கடந்த அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ், மக்களுக்கு சேவை புரிய பிரதமர் தனக்கு வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி என உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
5. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து
நாடு முழுவதும் 300 இடங்களுக்கு மேல் பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.