மாநில செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு? அழகிரி பேட்டி + "||" + Who supports the parliamentary election?

நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு? அழகிரி பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு? அழகிரி பேட்டி
நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பேன் என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. பிரதான கட்சிகள் தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் இணைந்து வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பேன். மதுரை மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர் என்னை சந்தித்து பேசியதும் ஆதரவு அளிப்பது குறித்து முடிவெடுப்பேன் என்றார்.