மாநில செய்திகள்

மதுரை அருகே கண்டெய்னர் லாரியில் 6 பெட்டிகளில் இருந்த தங்க நகைகள் பறிமுதல்? + "||" + Gold jewelry seized in 6 boxes?

மதுரை அருகே கண்டெய்னர் லாரியில் 6 பெட்டிகளில் இருந்த தங்க நகைகள் பறிமுதல்?

மதுரை அருகே கண்டெய்னர் லாரியில் 6 பெட்டிகளில் இருந்த தங்க நகைகள் பறிமுதல்?
மதுரையில் இருந்து திருச்சி எடுத்து செல்லப்பட்ட கண்டெய்னர் லாரியில் தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை,

தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், மதுரை மாவட்டத்தில் கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான நடராஜன் உத்தரவின் பேரில் 70-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர மதுரை மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

இந்நிலையில்,  மதுரை மேலூர் சித்தம்பட்டி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் 6 பெட்டிகளில் இருந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெட்டிகளில் இருப்பது கவரிங்கா? தங்கமா? என தேர்தல் பறக்கும் படையினர் விசாரித்து வருகின்றனர்.

கவரிங் நகைகள் என லாரியில் வந்தவர்கள் கூறியுள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.  6 பெட்டிகளில் உள்ள நகைகள், தங்கமா என நகை மதிப்பீட்டாளர்களை கொண்டு ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

ஆவணமின்றி எடுத்துச் சென்றதால் ஏராளமான பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.