மாநில செய்திகள்

மக்களவை தேர்தலில் நான் போட்டியிட வாய்ப்புள்ளது - தமிழிசை சௌந்தரராஜன் + "||" + I am likely to contest the Lok Sabha elections

மக்களவை தேர்தலில் நான் போட்டியிட வாய்ப்புள்ளது - தமிழிசை சௌந்தரராஜன்

மக்களவை தேர்தலில் நான் போட்டியிட வாய்ப்புள்ளது - தமிழிசை சௌந்தரராஜன்
மக்களவை தேர்தலில் நான் போட்டியிட வாய்ப்புள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்,

இன்று மாலை டெல்லியில் எங்கள் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு தான் சென்று கொண்டிருக்கிறேன். ஸ்டாலின் ராகுலை பிரதமராக்குவோம் என்கிறார். ராகுல் ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்கிறார். ஸ்டாலின் ராகுலை பிரதமராக்குவோம் என தமிழகத்திற்குள் மட்டும் தான் சொல்கிறார்.

தமிழகத்தை விட்டு வெளிய சென்று எங்கேயும் ராகுலை பிரதமராக்குவோம் என ஸ்டாலின் சொன்னதில்லை. எனவே இரண்டுமே நடக்கப்போவதில்லை.

பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியிடப்படும். மக்களவை தேர்தலில் நான் போட்டியிட வாய்ப்புள்ளது, எந்த தொகுதி என்பதை தலைமை முடிவு செய்யும்.

எங்கள் கட்சியின் சின்னத்திற்கு சின்னப் பிரச்னைகூட வராது. பிரதமர் மோடி சோஷியலாகவும், சோஷியல் மீடியாவிலும் பலத்துடன் இருக்கிறார். ஆனால் இன்று சில அரசியல் கட்சியினர் சோஷியல் மீடியாக்களை தவறாக பயன்படுத்துகின்றனர். 

சிறப்பான கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறோம். எனவே சிறப்பான வெற்றி பெறுவோம். மத்தியில் பாஜக மலரும், தமிழகத்தில் இரட்டை இலை மேலும் வலுப்பெறும். 

இவ்வாறு அவர் கூறினார். 

தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக, பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று, தூத்துக்குடியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இரண்டு கட்சிகளுக்கும் தூத்துக்குடியில் பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தின் மீது பாஜகவுக்கு அதிக அக்கறை உள்ளது: தமிழிசை சௌந்தரராஜன்
தமிழகத்தின் மீது பாஜகவுக்கு அதிக அக்கறை உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
2. தீவிரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது, பிரதமரின் கருத்து மிகச் சரியானது: தமிழிசை சௌந்தரராஜன்
தீவிரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது, பிரதமரின் கருத்து மிகச் சரியானது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
3. என்னை அரசியலை விட்டு விலகச்சொல்ல யாருக்கும் உரிமை இல்லை - தமிழிசை சௌந்தரராஜன்
என்னை அரசியலை விட்டு விலகச்சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
4. பதவி பசி காரணமாக பாஜகவுடன் ஸ்டாலின் பேசி வருகிறார் - தமிழிசை சௌந்தரராஜன்
பதவி பசி காரணமாக பாஜகவுடன் ஸ்டாலின் பேசி வருகிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
5. தமிழக மாணவர்கள் எந்த குழப்பமும் இல்லாமல் நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர் - தமிழிசை சௌந்தரராஜன்
தமிழக மாணவர்கள் எந்த குழப்பமும் இல்லாமல் நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை