மாநில செய்திகள்

2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் நான் நின்றாலும் நிற்பேன் - டிடிவி தினகரன் + "||" + I wil stand in the seat of Theni TVDhinakaran

2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் நான் நின்றாலும் நிற்பேன் - டிடிவி தினகரன்

2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் நான் நின்றாலும் நிற்பேன் - டிடிவி தினகரன்
2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் நான் நின்றாலும் நிற்பேன் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,

செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது:-

பணமூட்டையுடன் சென்று வெற்றி பெறலாம் என்றால் 40 தொகுதிகளிலும் தொழிலதிபர்களை நிறுத்தலாமே? கூட்டணிக்காக கட்சிகளை அதிமுக தேடிச்சென்றது இது தான் முதன்முறை. கூட்டணி அமைக்கப்பட்ட அன்றே தோற்கடிக்கப்பட்ட கூட்டணி அதிமுக-பாஜக கூட்டணி. தொண்டர்கள் விருப்பப்பட்டால் தேனி மக்களவை தொகுதியில் நான் நின்றாலும் நிற்பேன். 

தென் மண்டலம் மட்டுமின்றி அனைத்து மண்டலங்களிலும் ஆதரவு உள்ளது.  3 மாதமாக மாவட்ட செயலாளர்கள், நகர செயலாளர்களிடம் ஆலோசித்து வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22ஆம் தேதி அமமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு உள்ளது. ஓசூர் தொகுதிக்கான வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார். நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வரும் 27-ம் தேதி தொடங்குவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மக்களவை தேர்தலில் அமமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
அமமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவோரின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 24 மக்களவை தொகுதிகளுக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
2. டிடிவி தினகரன் அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் அதிமுகவில் இணைந்தார்
டிடிவி தினகரன் அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
3. குக்கர் சின்னம் தரமுடியாது என உச்சநீதிமன்றம் கூறவில்லை -டிடிவி தினகரன்
குக்கர் சின்னம் தரமுடியாது என உச்சநீதிமன்றம் கூறவில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
4. டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் வழங்கலாமா? வேண்டாமா? என்பதை தேர்தல் ஆணையமே முடிவு எடுக்காலம் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.
5. 95 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டதாக அரசு கூறுவது உண்மையில்லை- டிடிவி தினகரன்
95 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டதாக அரசு கூறுவது உண்மையில்லை என அம்மா மக்கள முன்னேற்ற கழக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.