மாநில செய்திகள்

தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் - கருத்துக்கணிப்பு + "||" + Tamil Nadu Opinion Poll UPA will win 34 seats

தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் - கருத்துக்கணிப்பு

தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் - கருத்துக்கணிப்பு
தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிமுக, திமுக தலைமையில் தமிழகத்தில் இரு மெகா கூட்டணிகள் இந்த முறை அமைந்துள்ளது. இந்த கூட்டணி போக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரன் கட்சியும் தனியாக களமிறங்குகிறது. பிற இதர கட்சிகளும் தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத மிகவும் முக்கியமான தேர்தலாக இது உள்ளது. அரசியல் கட்சிகள் வெற்றியை பெற தீவிரம் காட்டுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களையும் அதிமுக கூட்டணி 5 இடங்களையும் கைப்பற்றும் என டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 52.20 சதவித வாக்குகளையும், அதிமுக, பா.ஜனதா., பாமக, தேமுதிக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 37. 20 சதவித வாக்குகளையும், மற்ற கட்சிகள் 10.60 சதவித வாக்குகளை கைப்பற்றும் என கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களையும் கம்யூனிஸ்ட் கூட்டணி 3 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஜெகன் மோகனின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் 22 இடங்களையும் தெலுங்கு தேசம் 3 இடங்களையும் கைப்பற்றும். தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி 13 தொகுதிகளையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒரு தொக்தியிலும், பா.ஜனதா கூட்டணி 2 தொகுதியிலும், மற்றவை ஒரு தொகுதியிலும் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை -கனிமொழி எம்பி
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனக்கு விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை என கனிமொழி எம்பி கூறினார்.
2. வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 14683 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
வேலூர் மக்களவை தேர்தல் : திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 14683 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
3. வேலூர் மக்களவை தொகுதி : கதிர் ஆனந்த் 12158 வாக்குகள் முன்னிலை
வேலூர் மக்களவை தொகுதியில் இருகட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருவதால் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
4. நொடிக்கு... நொடி... மாறும் நிலவரம் பதட்டத்தில் வேட்பாளர்கள் ; ஏ.சி.சண்முகம் 13104 வாக்குகள் முன்னிலை
வேலூர் மக்களவை தொகுதியில் இருகட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருவதால் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
5. வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை