தேசிய செய்திகள்

2019 தேர்தலில் மீண்டும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் - கருத்துக்கணிப்பு + "||" + 2019 Lok Sabha elections Times Now VMR survey

2019 தேர்தலில் மீண்டும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் - கருத்துக்கணிப்பு

2019 தேர்தலில் மீண்டும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் - கருத்துக்கணிப்பு
2019 தேர்தலில் மீண்டும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 283 தொகுதிகள் கிடைக்கும் எனவும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 135 தொகுதிகள் கிடைக்கும் எனவும் மற்றவை 125 இடங்களை கைப்பற்றும் எனவும் டைம்ஸ் நவ்-  விஎம்ஆர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் 80 தொகுதிகளைக் கொண்ட உ.பி.யில் பா.ஜனதா 42 தொகுதிகளில் வெற்றிப்பெறும் என்றும் காங்கிரஸ் இரண்டு தொகுதிகளில் வெற்றிப்பெறும் என்றும் சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி 36 தொகுதிகளில் வெற்றிப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜனதா இடையே கடுமையான போட்டி நிலவும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், பா.ஜனதா 11 தொகுதிகளிலும் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தில் பா.ஜனதா கூட்டணி 39 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 9 இடங்களிலும் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் பா.ஜனதா கூட்டணிக்கு  27 தொகுதியும், காங்கிரஸ் கூட்டணிக்கு 13 தொகுதியும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஒன்றரை மாதத்தில் 3¾ கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்தது, பா.ஜனதா - திட்டமிட்ட இலக்கை தாண்டி சாதனை
ஒன்றரை மாதத்தில், 3¾ கோடி புதிய உறுப்பினர்களை பா.ஜனதா சேர்த்துள்ளது. திட்டமிட்ட இலக்கை தாண்டி சாதனை படைத்துள்ளது.
2. சட்டசபை தேர்தலில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் கிடைக்குமா?
சட்டசபை தேர்தலில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் வழங்குவது குறித்து மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
3. சிக்கிம் மாநிலத்தில் எஸ்டிஎப் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் பா.ஜனதாவில் இணைந்தனர்
சிக்கிம் மாநில அரசியலில் திடீர் திருப்பமாக எஸ்.டி.எப். கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்.
4. மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் தந்தையுடன் பா.ஜனதாவில் இணைந்தார்
மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் தனது தந்தை மஹாவீர் போகத்துடன் பா.ஜனதாவில் இணைந்துள்ளார்.
5. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை கொறடா பா.ஜனதாவில் இணைந்தார்
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் மாநிலங்களவை கொறடா பா.ஜனதா கட்சியில் இணைந்தார்.