தேசிய செய்திகள்

பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர் ராவ் கட்சிக்கு செல்ல திட்டம்? + "||" + Most Congress MLAs plan to go to the Chandrashekhar Rao party?

பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர் ராவ் கட்சிக்கு செல்ல திட்டம்?

பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர் ராவ் கட்சிக்கு செல்ல திட்டம்?
தெலுங்கானா சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 19 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் பலர் கட்சித்தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர்

ஐதராபாத், 

முதல்–மந்திரி சந்திரசேகர் ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கு (டி.ஆர்.எஸ்.) செல்வதற்கு அவர்கள் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை 8 எம்.எல்.ஏ.க்கள் இவ்வாறு அணி தாவ திட்டமிட்டு உள்ள நிலையில், மொத்த எம்.எல்.ஏ.க்களில் 3–ல் 2 பங்குக்கும் அதிகமானோர் தற்போது டி.ஆர்.எஸ். கட்சிக்கு வர இருப்பதாக சந்திரசேகர் ராவின் மகளும், எம்.எல்.ஏ.வுமான கல்வகுண்ட்ல கவிதா தெரிவித்து உள்ளார்.

சந்திரசேகர் ராவின் ஆட்சியில் மாநிலம் வளர்ச்சிப்பாதையில் நடைபோடுவதை பார்த்து காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தங்கள் கட்சிக்கு வர இருப்பதாக அவர் தெரிவித்தார். அதே நேரம் பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அணி மாற திட்டமிட்டு இருப்பது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து ப.சிதம்பரம் டெல்லி வீட்டிற்கு திரும்பினார், சிபிஐ அதிகாரிகள் முற்றுகை
காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து ப.சிதம்பரம் டெல்லி வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
2. சிதம்பரத்தின் செயல்பாடு மல்லையா, நிரவ் மோடி போல் உள்ளது: பாஜக காட்டம்
சிதம்பரத்தின் செயல்பாடு விஜய் மல்லையா, நிரவ் மோடி போல் உள்ளது என்று பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
3. இந்தியா அவசர நிதிநிலை தேவையை சந்தித்து கொண்டிருக்கிறது : அபிஷேக் சிங்வி
இந்தியா பொருளாதாரத்தில் மந்தநிலையையும், அவசர நிதிநிலை தேவையையும் எதிர்க்கொண்டிருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.
4. ம.தி.மு.க.-காங்கிரஸ் கருத்து மோதலால் கூட்டணிக்கு பாதிப்பில்லை - தொல்.திருமாவளவன் பேட்டி
“ம.தி.மு.க.-காங்கிரஸ் இடையே எழுந்த கருத்து மோதலால் கூட்டணிக்கு பாதிப்பில்லை” என தொல்.திருமாவளவன் கூறினார்.
5. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை கொறடா பா.ஜனதாவில் இணைந்தார்
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் மாநிலங்களவை கொறடா பா.ஜனதா கட்சியில் இணைந்தார்.