தேசிய செய்திகள்

‘நானும் காவலாளிதான்’ பிரசாரம்: பா.ஜனதா மீது மாயாவதி, அகிலேஷ் யாதவ் விமர்சனம் + "||" + 'I am also a watchman' campaign Mayawati, Akhilesh Yadav's comment on BJP

‘நானும் காவலாளிதான்’ பிரசாரம்: பா.ஜனதா மீது மாயாவதி, அகிலேஷ் யாதவ் விமர்சனம்

‘நானும் காவலாளிதான்’ பிரசாரம்: பா.ஜனதா மீது மாயாவதி, அகிலேஷ் யாதவ் விமர்சனம்
பிரதமர் நரேந்திர மோடி, ‘நானும் காவலாளிதான்’ என்ற பிரசாரத்தை தொடங்குமாறு பா.ஜனதாவினரை கேட்டுக் கொண்டார். இதையடுத்து, அவர் உள்பட பா.ஜனதாவினர் பலர், தங்கள் பெயருக்கு முன்னால், ‘சவுகிதார்’ (காவலாளி) என்று சேர்த்துக் கொண்டுள்ளனர்.

லக்னோ, 

பகுஜன் சமாஜ் கட்சி தவைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பதிவில், ‘‘கடந்த 2014–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, டீ வியாபாரியாக இருந்த மோடி, தற்போது காவலாளி ஆகிவிட்டார். அவரது ஆட்சியில் இந்தியா அடைந்த மாற்றத்தை இது காட்டுகிறது. பிராவோ..’’ என்று அவர் கூறியுள்ளார்.

இதுபோல், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தனது ‘டுவிட்டர்’ பதிவில், ‘‘உரத்திருட்டை தடுக்கக்கூடிய காவலாளி யாராவது இருக்கிறாரா? ரபேல் ஆவணங்கள் திருட்டு தொடர்பாக தண்டிக்கும் பொறுப்பு இந்த காவலாளிக்கு இருக்கிறதா?’’ என்று கேட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பெண் எம்.பி.யிடம் சர்ச்சை பேச்சு அசாம்கான் அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் - மாயாவதி
பெண் எம்.பி.யிடம் சர்ச்சைக்குரிய விதமாக பேசிய அசாம்கானுக்கு மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
2. மாயாவதி சகோதரரின் ரூ. 400 கோடி மதிப்பிலான பிளாட்டை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சகோதரர் ஆனந்த் குமாரின் ரூ. 400 கோடி மதிப்பிலான பிளாட்டை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
3. மாயாவதியின் அவசர முடிவு சமூக நீதிக்கான போராட்டத்தை பலவீனப்படுத்தும் - சமாஜ்வாடி
சமாஜ்வாடி கட்சியுடன் இனி கூட்டணி கிடையாது என்ற மாயாவதியின் அவசர முடிவு சமூக நீதிக்கான போராட்டத்தை பலவீனப்படுத்தும் என சமாஜ்வாடி தெரிவித்துள்ளது.
4. ”ஒரே நாடு ஒரே தேர்தல்” பாஜகவின் சூழ்ச்சி: மாயாவதி விமர்சனம்
”ஒரே நாடு ஒரே தேர்தல்” பாஜகவின் சூழ்ச்சி என்று மாயாவதி விமர்சித்துள்ளார்.
5. பிரதமர் மோடி வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டால் கலந்து கொள்வேன் -மாயாவதி
பிரதமர் மோடி வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டால் கலந்து கொள்வேன் என மாயாவதி கூறியுள்ளார்.