தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு காங்கிரஸ் கூட்டணி அறிவிப்பு + "||" + Congress has finalised alliance with National Conference in JK

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு காங்கிரஸ் கூட்டணி அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு காங்கிரஸ் கூட்டணி அறிவிப்பு
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு காங்கிரஸ் இடையே கூட்டணி அமைந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளோம் என காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். தேசியத்தின் நலனை கருத்தில் கொண்டு இந்த கூட்டணி அமைந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து பெரும் எச்சரிக்கையை எதிர்க்கொண்டுள்ள மாநிலத்தில் மதசார்பற்ற அமைப்புகளை வலுப்படுத்த கூட்டணி அமைக்கப்படுகிறது. காங்கிரஸ் ஜம்மு மற்றும் உதாம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறது.

ஸ்ரீநகர் தொகுதி தேசிய மாநாட்டு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனந்த்நாக் மற்றும் பாரமுல்லா தொகுதியில் நட்பு ரீதியிலான போட்டியிருக்கும். அதாவது இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் சாடாமல் போட்டியில் இருக்கும். யார் வெற்றிப்பெற்றாலும், எங்களுக்கான வெற்றிதான் என்பது அதனுடைய பொருளாகும். லாடக் தொகுதி தொடர்பாக நாங்கள் ஆலோசனையை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு குலாம் நபி ஆசாத் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவதை தடுக்க திமுகவில் பெரிய கூட்டம் செயல்படுகிறது -காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்
ஸ்டாலின் முதல்வராகக் கூடாது என திமுகவில் ஒரு பெரிய கூட்டம் செயல்படுகிறது என காங்கிரஸ் எம்.பி கூறி உள்ளார்.
2. காங்கிரஸ் அறிக்கையை திமுக தலைவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டாகவே பார்க்கிறோம்- டி.ஆர்.பாலு
காங்கிரஸ் அறிக்கையை திமுக தலைவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டாகவே பார்க்கிறோம், அதனால் தான் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்கவில்லை என டி.ஆர்.பாலு கூறினார்.
3. நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் நடத்திய எதிர்கட்சிகள் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை!
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் நடத்திய எதிர்கட்சிகள் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை.
4. ‘சாதாரண மக்களை பாதிக்கும்’ ரெயில் கட்டணம் உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்
கியாஸ் சிலிண்டர் விலை மற்றும் ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
5. ‘காங்கிரஸ் நாட்டை துண்டாட பார்க்கிறது’ - மத்திய மந்திரி கிரிராஜ் சிங் குற்றச்சாட்டு
காங்கிரஸ் நாட்டை துண்டாட பார்ப்பதாக, மத்திய மந்திரி கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.