தேசிய செய்திகள்

கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம்: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு + "||" + In Karnatakas Dharwad building collapse, death toll mounts to 10

கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம்: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம்: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் தார்வார் டவுனில் புதிதாக தனியார் வணிக வளாகம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்த வணிக வளாக கட்டிடம் 5 மாடிகளை கொண்டது ஆகும். அந்த கட்டிடத்தின் பணிகள் வேகமாக நடந்து வந்தன. இதில் தரை தளம் மற்றும் முதல் மாடி கட்டிட பணிகள் முடிந்து அங்கு பல கடைகள் இயங்கி வந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த வணிக வளாகத்தின் கட்டிட பணியில் தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் பெண்களும் அடங்குவர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 4 மணியளவில் அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் அந்த கட்டிடத்தில் இருந்த வாடிக்கையாளர்கள், கடைகளின் ஊழியர்கள், மேலும் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களின் கதி என்ன? என்று தெரியாமல் இருந்தது. தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு படையினர், மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கட்டிட இடிபாடுகளை அகற்ற பொக்லைன் எந்திரங்கள், கியாஸ் கட்டர்கள் ஆகியவையும் பயன்படுத்தப்பட்டன.

40-க்கும் மேற்பட்டோரை கட்டிட இடிபாடுகளில் இருந்து தீயணைப்பு படையினரும், மீட்பு குழுவினரும் மீட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைக்கப்பட்டனர். 

மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன என நேற்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்றதில் இன்று மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது.

தொடர்ந்து மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. மீட்பு பணிகள் நிறைவடைந்த பிறகே உண்மை நிலவரம் தெரியவரும். இன்னும் 12-15 பேர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் வயலில் இறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்
கர்நாடகத்தில் விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று வயலில் இறங்கிய சம்பவம் நிகழ்ந்தது.
2. கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தள்ளிவைப்பு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
3. கர்நாடகத்தில் மஞ்சள் ‘அலர்ட்’ நீடிக்கும் நிலையில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
கர்நாடகத்தில் மஞ்சள் ‘அலர்ட்‘ நீடிக்கும் நிலையில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) இடி-மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
4. கர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவில் மாற்றமில்லை: குமாரசாமி திட்டவட்டம்
கர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவில் மாற்றமில்லை என்று குமாரசாமி தெரிவித்தார்.
5. சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிபதி விலகல்
சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் வாதாடிய நீதிபதி விலகி உள்ளார்.